சிந்துப்பாடல் --- வளையற் சிந்து

முயற்சியினால் நலம்பலவும்
முழுவதுமாய் உண்டு -- என
முகங்கனியப் பண்டு -- நாம்
முயன்றிடலாம் கொண்டு -- தினம்
முயற்சியினைச் செய்திடவும்
முகவரிகள் கண்டு !



தயக்கமின்றி மதிவழியே
தகர்த்திடலாம் இன்று -- மனத்
தளர்ச்சியின்றி வென்று -- நாம்
தரத்தினிலே சென்று -- நலம்
தங்கிடவும் வெற்றியினால்
தரணியிலே நின்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Apr-16, 6:28 pm)
பார்வை : 57

மேலே