காதல் நினைவுகள்

நீளம் தாண்டும் போட்டியிலும் நான் வென்றுவிடுவேன்
ஆனால் உன் கன்னக்குழி தாண்டும் போராட்டத்தில் தோற்றுவிட்டேன்
உன் இதழ்களின் சுழலில் சிக்கி சுழண்டேன்
உன் அழகில் சரண் அடைந்தேன்
உன் விழிகளால் வீழ்த்தபட்டேன்
என்னை மறந்தேன் அதில்
உன்னை நிறைத்தேன்
உன் நினைவில் மூழ்கி தவித்தேன்
நம் காதலில் சிக்கி சிதைந்தேன்
வெட்கத்தை வீசி காயங்கள் தருகிறாய்
காரணங்கள் இன்றி கோவமும் கொள்கிறாய்
அடிக்கவும் செய்கிறாய் அடித்தபின் அனைத்தும் கொள்கிறாய்
என இது நீ நல்லவளா இல்லை கெட்டவளா என்று நான் கேட்க
சீ போ..... என்று சிணுங்கி கொள்கிறாய்
கடற்கரையில் கடல் அலைகள் உன் கால் உரச கோவம் கொண்டேன்
அலைகளுக்கு பயந்து என் கைகளை நீ பிடிக்க மன்னித்துவிட்டேன் அலைகளை
தனிமையில் இருக்கையில் பாடல் வரிகளை ரசித்து தலை அசைத்து கொண்டு இருந்தாய் நீ
உன் தலை அசைவை ரசித்து பாடல்கள் பல எழுதிடலாம் என்று தோன்ற முயற்சிதேன் சில வரிகள்
"இசைக்கு தலை அசைக்கும் உருவ கவிதையே உன் அசைவுகளே ஆயிரம் பாடல்கள் சொல்லும்மடி"
கிருக்கியதை படித்துவிட்டாய் என்னை கவிஞன் என்றாய் நான் கிருக்கியதை கவிதை என்றாய்
நகைத்து கொண்டே
நீ இருக்கையில் இந்த கிறுக்கல் எப்படி கவிதை ஆகும்
உன் தந்தை இருக்கையில் நான் எப்படி கவிஞன் ஆவேன் என்றேன்
சில்லறை சிரிப்பை வீசி சாய்ந்து கொண்டாய் என் தோளில்
நான் தொலைந்து போனேன் அந்நாளில்
நீளவேண்டும் இந்த பொழுதுகள்
தேட வேண்டும் காதலில் திகைத்த நினைவுகள்
பிள்ளை பல வந்த பின்னும் காதல் குறையாமல் நாம் இருந்திட வேண்டும்
நித்தம் நித்தம் நாம் காதல் மழையில் நனைந்திட வேண்டும்

எழுதியவர் : அரவிந்த்.ச (9-May-16, 5:47 pm)
Tanglish : kaadhal ninaivukal
பார்வை : 372

மேலே