வெற்றியும் தோல்வியும்

தோல்விகளும் அவமானங்களும் அசிங்கம் அல்ல உன் நாளைய வெற்றியின் அடையாளங்கள்

தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இடையினில் இருக்கும் இடைவெளி தான் வாழ்க்கை

வெற்றி என்பது தேங்கி கிடைக்கும் குளம்
தோல்வி என்பது விழுந்து எழுந்து ஓடும் காட்டாறு

வெற்றி என்பது தலையை அலங்கரிக்கும் கிரீடம் அல்ல தலையில் கூடும் கணம்

வெற்றி என்பது முற்றுப்புள்ளி தோல்வி வெற்றியின் முதல்புள்ளி

தோல்விகளை நேசி வெற்றிகளை வென்றுவிடலாம்

தோல்வியின் ருசி அறிந்தவன் மேதை
வெற்றியின் ருசியை மட்டுமே அறிய துதிப்பவனுக்கு வெற்றி வெறும் போதை
தோல்வின்பொழுது அமைதியை இரு வெற்றியின்பொழுது மௌனமாய் இரு

தோல்வியின் பொழுதுகளில் உன் அமைதி உன்னை பலப்படுத்தும்
வெற்றியின் பொழுதுகளில் உன் மௌனம் உன்னை ஊக்கப்படுத்தும்

எழுதியவர் : அரவிந்த்.ச (4-Jul-16, 9:55 am)
Tanglish : vetriyum tholviyum
பார்வை : 1400

மேலே