ஆடித்திருவிழா-கங்கைமணி

ஆடிப்பெருவிழாவாம்
அழகர்தம் திருவிழாவாம்
கூடி மனிதரெல்லாம்
கொண்டாடும் ஓர்விழாவாம்

பச்சைப்பட்டுடுத்தி
பவளத்தில் மணிகளிட்டு
தங்கத்தில் தலைப்பாகை
தரித்த நற் மலர்முகதோன்

செங்கதிர் மேனிதாங்கி
சங்கு கரத்தழகர்
பொங்கும் மனிதவெள்ளம்
எங்கும் கரைபுரள
எழுந்தருளக்கண்டு!

கொட்டும் குலவையுமாய்
கும்மாள குதூகளமாய்
குளத்துக்கரை மீனாய்
குதிக்கும் மனங்களெல்லாம்

பக்திப்பரவசத்தில்
முக்தி நிலை வேண்டி
நெஞ்சக்கதவுகளை
நெகிழ்ந்தே தான் திறந்து ,
அண்டசராசரமனைத்துமானவனை
அழகர் மலைச்சாரல்
அருவிநீராக-
ஓடிவரவேண்டி
உள்ளம் உருகிடுவர்.,
அழகர்மலையானின் அருளைத்தான்பெற்று
அமைதிவாழ்வெடுத்து ஆயுள் கழித்திடுவர்

எழுதியவர் : கங்கைமணி (6-Jul-16, 1:53 pm)
பார்வை : 128

மேலே