வா வானம் அளக்கலாம்

போதும் ...
நீ சிறகுகள் மறைத்தது …!
இளவேனில் வரையா
காத்திருப்பது ?

விரிந்த வாழ்க்கை
நம்மை விரியச் சொல்கிறது
காலம் நம்மை
வெல்ல அழைக்கிறது
காலம் தாழ்த்திச்
சிந்தித்து என்னாவது?

பட்டாம் பூச்சியா நீ ?
பார்த்தவரெல்லாம்
பிடித்து விளையாட...
பரவசம் தீர்ந்ததும்
இறக்கை கிழித்துக் கொண்டாட...

சின்னப் பறவைதான் நீ
வானம் அளக்கலாம்
காற்றைக் கோர்த்து
மாலை தொடுக்கலாம்…

வாழ்க்கையை வெல்லாமல்
வாழவும் கூடுவதா?
இலட்சியம் அடையாமல்
வீழவும் நேருவாதா?

எழுதியவர் : தண்மதி (6-Jul-16, 5:02 pm)
பார்வை : 174

மேலே