தண்மதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தண்மதி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 246 |
புள்ளி | : 26 |
துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான்
சொல்கிறேன்
துண்டித்து விடென்று
அலைபேசியில் பேசும்பொழுதெல்லாம்...
யாரிவன்? என் பாதைகளில்
பூஞ்செடிகள் வளர்க்க
வந்தவனோ?
தெரியவில்லையே...
பாதைகளில் நடந்து போனவர்களின்
பாதணிகளின் சுவடுகள்
எங்கோ தூரமாய்ப்
பயணம் போகும்...
கடக்கின்ற போதெல்லாம்
பாதையோரப் பைத்தியக்காரத்
தாத்தாவுக்காக விழிகள் அழுது வைக்கும்...
உடன் இருப்பவர்களை ,உடன் வேலை செய்பவர்களை ,பக்கத்து வீட்டில் இருப்பவர்களை ,உறவினர்களை உண்மையாக நேசிக்க மனம் இல்லாதபோது ,இந்த உலகில் கஷ்டப்படுபவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வோம் வா என்று கிளம்புவது என்ன வகையான மனிதநேயம்? உண்மையில் உடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை குறைந்து உதவும் குணம் மறுத்து வெறும் புண்ணியம் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோமா? உதடுகளில் மட்டும் புன்னைகையா?என்னமாதிரியான பயணம் இது?
இனி எங்கே பிரிவது ?
என் பெயர் என்னவென்று
கேட்பவர்களிடம்
என் பெயரே மறந்து நான்
உன் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கையில்…
இந்தக் காந்த இயற்கை
இரும்பையல்ல
இதயத்தை அல்லவா
ஈர்த்துக் கொள்கிறது !
யாருக்காகவோ அதிகாலைகளில்
காத்திருந்து விட்டுப் போகும்
வெள்ளி நிற மேகங்கள்...
காதிற்குள் பனி கலக்க
உயிருக்குள் ரசவாதம் நடக்கும்...
தூரத்து பறவைகள்
வெள்ளை நிலா பார்த்துக் கீச்சிட
அடம் பிடிக்கும் அரை நிலா
பூமி வந்து சேராது…
இதழ் விரியத் திறக்கும் மொட்டாய்
மெதுவாய் ஆதவன் திறக்கும்
அந்தக் கணம்
தீபமொன்று புவிக்குள் எரியும்…
போக்கிடங்கள் இல்லாத போழ்து
மயக்கம் விழைக்கும்
இந்த நிகழ்வுகளில்
கவிஞன் மனசு
போர்த்திக் கொண்டு தூங்கும்!
போதும் ...
நீ சிறகுகள் மறைத்தது …!
இளவேனில் வரையா
காத்திருப்பது ?
விரிந்த வாழ்க்கை
நம்மை விரியச் சொல்கிறது
காலம் நம்மை
வெல்ல அழைக்கிறது
காலம் தாழ்த்திச்
சிந்தித்து என்னாவது?
பட்டாம் பூச்சியா நீ ?
பார்த்தவரெல்லாம்
பிடித்து விளையாட...
பரவசம் தீர்ந்ததும்
இறக்கை கிழித்துக் கொண்டாட...
சின்னப் பறவைதான் நீ
வானம் அளக்கலாம்
காற்றைக் கோர்த்து
மாலை தொடுக்கலாம்…
வாழ்க்கையை வெல்லாமல்
வாழவும் கூடுவதா?
இலட்சியம் அடையாமல்
வீழவும் நேருவாதா?
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !
உற்றுக் கேளுங்கள்
பேசுவது கேட்கும்
மலர்கள் !
இரண்டே நிமிடத்தில் தயார்
என்று சொல்லி விற்றனர்
உயிர்க்கொல்லி !
ஆபத்து
நவீன உடையும்
நவீன உணவும் !
உணர்த்திடும்
அடுத்தவர் வலி
மனிதநேயம் !
மடிகிறார்கள்
மனிதர்கள்
மண் சண்டையால் !
சிறகுகள் இருந்தும்
பறக்காததால்
வாத்து மடையன் !
காற்றுடன்
போராடியே எரிகிறது
மெழுகுவர்த்தி !
அடங்குவதே இல்லை
பணக்காரனின்
பணப்பசி !
ஒளி வர இருள் ஒளியும்
தன்னம்பிக்கை வர
துன்பம் ஒழியும் !
போரில் மட்டுமல்ல
அரசியலிலும் தொடர்கிறது
முதுகில் குத்துதல் !
வேண்டாம் மூ
இறைவன் அமைத்திட்ட
எனதிந்து பயணம்
நிறுத்திடவும் வழியில்லை
பாதியில் இறங்கிடவும் உரிமையில்லை.
விழுவதும் எழுவதும் வழமையாகிவிட
விடுவித்து விலகிட விளைகிறது மனம்
எவ்வாறாயினும் இறைவன் கொடுத்த
எனதிந்த பயணத்தை தொடர்ந்து செலுத்திட வேண்டும்.
துரோகிகளையும் எதிரிகளையும்
எதிா்கொள்ளத் துணிவு கொள்ளாமல்
ஏமற்றங்களையும் சறுக்கல்களையும்
சுதாரிக்க சக்தியற்றவனாய்
பயணத்திலிருந்து பாதியிலெ
விடைபெற விளைந்திடும் மனதின்
ஓர விளிம்பில் வாழ்ந்திட வேண்டுமெனவும்
ஆவல் பிறக்கிறது
தொடர்ந்து செலுத்துகிறேன் பயணத்தை
என்னிலும் சிறியோர் நிலையெண்ணி
வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க எத்தனிக்க
"மனிதம்" என்ற வார்த்தையைத் தொலைத்துவிட்டு பணத்தைச் சம்பாதித்துக் குவிப்பதில் என்ன பயன்? அடுத்தவனைப் பார்த்துப் புன்னகைக்கும் போதே அவன் உண்மையில் புன்னகைக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகம் நமக்கு.உழைத்து வாழ்வதை விட அடுத்தவனைக் குறை சொல்லி முன்னேறுவதிலேயே கவனம் எல்லோருக்கும்.நல்லவனை ஏமாளி என்கிறது இந்த உலகம்.இனி அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கும் விருந்தோம்பிய நம் ஆத்தாக்களும்,ஐயாக்களும் வரலாற்றில் எழுதப்படுவார்கள்.
"அ" போடும் போதெல்லாம்
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் வகுப்பு டீச்சரைப்
பார்க்க வேண்டுமென
**************
காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று
**************
பசியோடிருக்கிறேன்
என்னைத் தின்று
தன் குடலில் செரிக்கிறது
கவிதை
**************
பக்கங்களை நிரப்பும்
அவசியத்தில்
வசியப்பட மறுக்கிறது
கவிதை
**************
மௌனங்களில்
கிறுக்கி வைத்துப்போகிறது
சப்தம்
*************
பூக்களின் தேவதையே!
பூவின் முதல்இதழே
பட்டாம்பூச்சிக்கு றெக்கை
கடன்கொடுத்தவளே
நின்அழகே உச்சமென்றால்
உன்தாயின் கருவறை என்னென்பேன்
தீயில் விழுந்தெழுந்து
தென்றல் காற்றில் தேய்த்துக்கொண்டு
நதியில் குளித்தவளோ
நீ நங்கையிற் சிறந்தவளோ
உலகம் முழுவதிலும் உள்ள
உயிர்கள் நோக்குகின்றேன்
உன்னைத்தானே நான்
அழகின்தலைவி என்கின்றேன்
புடவை அணியாதே
என்புலமை தோற்றுவிடும்
பாடத் தெரியாமல்
என்பேனா தலைகுனியும்
நின்அழகில் தோய்ந்ததனால்
கண்கள் ஓய்ந்ததனால்
கதிரவன் ஓய்வெடுக்கப் போகின்றான்
நீயும் விழிகள் துயிலாயோ
மூடிய இமைகளுக்குள்
இருண்ட நட்சத்திரம்
புதிதாய்க் கிடைக்கட்டுமே...
நண்பர்கள் (6)

ப தவச்செல்வன்
திண்டுக்கல்

செல்வமணி
கோவை

சரவணன்
covai

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

சேகர்
Pollachi / Denmark
இவர் பின்தொடர்பவர்கள் (6)
இவரை பின்தொடர்பவர்கள் (6)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சேகர்
Pollachi / Denmark
