தமிழ் தேசம் சுரேஷ் வீராசாமி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் தேசம் சுரேஷ் வீராசாமி |
இடம் | : Australia |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 1332 |
புள்ளி | : 8 |
தமிழன்.....!!!
உழுதவன் உழவன்....!!!
வெற்றியும் தோல்வியும்
சுழலும் வாழ்க்கையில்
வந்து போவன
சுகம் தொடர்ந்து
சோகம் வரும்
பிறப்பை தொடர்ந்தே
ஒரு நாள் இறப்பு
காயா பாழமா என்றுதான்
ஆரம்பம் ஆனது எங்கள்
நட்பு பயணம்
அவன் தோள் என் தோல்வியையும்
என் தோள் அவன் தோல்வியையும்
தாங்கி பிடித்தது
தந்தை தாய் தமக்கை தம்பி
என்பவர்களின் ஒற்றை உருவம்
என் தோழன் அவன்
இறைவனை கனவிலும் நான்
கண்டது கிடையாது
இவன் நட்பு கிட்டும் வரை
என் நண்பனாய் அவன் கிடைக்க
நிச்சயம் நான் தவம் இருந்திருப்பேன்
என் முன் ஜென்மத்தில்
எங்களை பார்த்து ஊர் பேசியது
இவர்கள் தோழர்களா இல்லை
சகோதரர்களா என்று
அந்த வார்த்தைதான் எங்கள் நட்பை
இன்றுவரை காத்து வருகிறது
அவன் கேட்ட கேள்வி
காயா பழமா
எனக்கு எப்பவும் பழமே
தோழா...
பாண்டிய ராஜ்
காயா பாழமா என்றுதான்
ஆரம்பம் ஆனது எங்கள்
நட்பு பயணம்
அவன் தோள் என் தோல்வியையும்
என் தோள் அவன் தோல்வியையும்
தாங்கி பிடித்தது
தந்தை தாய் தமக்கை தம்பி
என்பவர்களின் ஒற்றை உருவம்
என் தோழன் அவன்
இறைவனை கனவிலும் நான்
கண்டது கிடையாது
இவன் நட்பு கிட்டும் வரை
என் நண்பனாய் அவன் கிடைக்க
நிச்சயம் நான் தவம் இருந்திருப்பேன்
என் முன் ஜென்மத்தில்
எங்களை பார்த்து ஊர் பேசியது
இவர்கள் தோழர்களா இல்லை
சகோதரர்களா என்று
அந்த வார்த்தைதான் எங்கள் நட்பை
இன்றுவரை காத்து வருகிறது
அவன் கேட்ட கேள்வி
காயா பழமா
எனக்கு எப்பவும் பழமே
தோழா...
பாண்டிய ராஜ்
புற்களின் மீது பனித்துளி
நாமே எழுதுவோம் நம் விதி....!!!
வானம் பூமி காற்று
வந்தோம் இங்கு நேற்று....!!!
சொற்கள் சுவைக்கும் - தமிழ்
சொன்னால் இனிக்கும் மொழி....!!!
வாழ்க்கை நமக்கு கனி
வாழ்வோம் அதற்கு இனி....!!!
தீயதை கொழுத்துவோம்
தீமையை விரட்டுவோம்
கதிரவனை எழுப்புவோம்
காரிருள் அகற்றுவோம்
உண்மை உரைப்போம்
உலகம் வெல்வோம்.............!!!
ஏலே பாரு காத்துல
வானம் மிதக்குது
வானம் பாத்த பூமியில்
மேகம் கருக்குது
மேகம் கொண்ட
மோகம் மழை பொழியுது
தாகம் கொண்ட
மனதில் சாரல் அடிக்குது
மழலை போலே மனம் தான் துள்ளி குதிக்குது
பட்ட மரத்தில் பால் சொறியுது
பாலை நிலத்தில்
புல் முளைக்குது
தேகம் சிலிர்க்குது
நெஞ்சம் நிறையுது
பூமி நனையுது
இரு உயிர்கள் கூடு சேருது
பூ மழை பொழியுது
பூ பூமியில் மலருது
அன்றிலே அன்றிலும் கலக்குது
பறவைகள் சிறகை விரிக்குது
தன் கூட்டிலே வாழ்க்கையை நடத்துது
பூமி குளுந்தாச்சி
மக்கள் பஞ்சம் போயே போயாச்சி
வேர் விட்டு வளரும்
சிறு மொட்டு
கடவுளை
காணுகின்றேன்
இன்று
கார் முகிலில்
~ பிரபா
இந்தக் காந்த இயற்கை
இரும்பையல்ல
இதயத்தை அல்லவா
ஈர்த்துக் கொள்கிறது !
யாருக்காகவோ அதிகாலைகளில்
காத்திருந்து விட்டுப் போகும்
வெள்ளி நிற மேகங்கள்...
காதிற்குள் பனி கலக்க
உயிருக்குள் ரசவாதம் நடக்கும்...
தூரத்து பறவைகள்
வெள்ளை நிலா பார்த்துக் கீச்சிட
அடம் பிடிக்கும் அரை நிலா
பூமி வந்து சேராது…
இதழ் விரியத் திறக்கும் மொட்டாய்
மெதுவாய் ஆதவன் திறக்கும்
அந்தக் கணம்
தீபமொன்று புவிக்குள் எரியும்…
போக்கிடங்கள் இல்லாத போழ்து
மயக்கம் விழைக்கும்
இந்த நிகழ்வுகளில்
கவிஞன் மனசு
போர்த்திக் கொண்டு தூங்கும்!
புற்களின் மீது பனித்துளி
நாமே எழுதுவோம் நம் விதி....!!!
வானம் பூமி காற்று
வந்தோம் இங்கு நேற்று....!!!
சொற்கள் சுவைக்கும் - தமிழ்
சொன்னால் இனிக்கும் மொழி....!!!
வாழ்க்கை நமக்கு கனி
வாழ்வோம் அதற்கு இனி....!!!
தீயதை கொழுத்துவோம்
தீமையை விரட்டுவோம்
கதிரவனை எழுப்புவோம்
காரிருள் அகற்றுவோம்
உண்மை உரைப்போம்
உலகம் வெல்வோம்.............!!!
என் தமிழ் நாடே தமிழின் தாயகமே
தமிழ், நாடு என்பதை நாம் நினைத்து
நாளும் போற்றி வளர்ப்போமே....!!!
ஆயிரம் ஆயிரம் காலம் கடந்து
அழியா புகழ் கொண்ட தமிழ் இனமே ...!!!
உன் தாயகம் இன்று தவிப்பதை கண்டு
திரண்டுவா பெரும் பேரினமே ..!!!
விதியால் பிரிந்தோம் தமிழால் இணைந்தோம்
மதியால் மண்ணை மீட்போமே.....!!!
வீரம் விதைத்தோம் வெற்றி அறுப்போம்
நாளை நமதென வாழ்வோமே...!!!