பாண்டிய ராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாண்டிய ராஜ்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  15-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2016
பார்த்தவர்கள்:  807
புள்ளி:  38

என்னைப் பற்றி...

கவிஞன் ஆக வெறி

என் படைப்புகள்
பாண்டிய ராஜ் செய்திகள்
பாண்டிய ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 8:28 pm

அப்பா

என்னையும் என்னை
சுமந்தவளையும் பேனி காத்த
கண்பட்ட தெய்வம் அப்பா

கண்ணக்குழியில் முத்தமிட்ட போது
காயப்படுத்திவிடுமோ என்று
மீசையை துறந்த மிட்டாசு
காரர் என் தந்தை

அவருக்கு பிடித்த புகையிலை
இன்று அவர் விரல்கள் கூட
அதை தொட அனுமதிப்பதில்லை
காரணம் எனக்கு பிடிக்காது

என்னிடம் முத்தம் வாங்க
எத்தனை திருட்டுத்தனம்
அத்தனையும் அழகு தான்
கோவில் திருவிழாவில்

கொடிக்கம்பம் ஏற்றுவது போல்
என்னை அவர் தோல்கள்
தாங்கிய நாட்க்கள்

பசியின் வலியினை மட்டும்
அவர் வைத்துக்கொண்டு
வயிறார அண்ணம் இடுவார்
எப்போதும் எங்களுக்கு

விழா நாட்களில் எப்போதும்
எங்கள் உடலை அலங்கரிக்

மேலும்

ஒவ்வொரு தந்தையினதும் தியாகங்கள் வார்த்தையால் மட்டும் சொல்லித் தீராதவை 24-Mar-2017 10:54 am
பாண்டிய ராஜ் - கவிஞர் மீன் கொடி பாண்டிய ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2016 7:50 pm

முறிந்த மரம்
நினைவுபடுத்தியது
ஊஞ்சல் விளையாட்டு

பலத்த காற்று
துளியும் பயன் இல்லை
பட்டு போன மரம்

அடர்ந்த காடு
பயமுறுத்துகிறது
யானையின் கால்தடம்

வெள்ளாமை வயல்
பெரிதாக வளர்ந்தது
கட்டிடம்

காய்ந்த இலைகள்
விழுந்ததும் வளர்கிறது
வசந்தகாலம்

ஊற்ற ஊற்ற
ஈர்த்தது தண்ணீர்
கோடை வெயில்
பாண்டிய ராஜ்

மேலும்

நன்றி சகோ 26-Nov-2016 3:10 pm
அருமை நண்பா 26-Nov-2016 1:15 pm
பாண்டிய ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 10:45 pm

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள் என்பதை
மறந்து போன பரம்பரை
விவசாயி தான்

அமோக விலைச்சல் தான்
அருந்தும் ஈட்ட முடியவில்லை
போட்ட முதலீட்டையும் கூட

அறுவடை முடிந்து
கருத அடித்து போட்டு
தூசி தட்ட தூவிய போது
கூடவே போகிறது அவன் உழைப்பு

உழைத்து உழைத்து கலைத்த
உழவன் இங்கு இருக்க
ஊமையாய் இருக்கிறது மனிதம்
உழவன் மாண்டதை கண்டும்

அதி வேகமாய் வீசும்
புயல் காற்றை பொலத்தான்
அனுதினமும் உழைத்து
கலைத்து போகிறான் உழவன்

யாரோ கண்ட அதிசய
கனவு போலவே இருக்கிறது
கலாம் கண்ட வல்லரசு கனவு

இந்திய முதுகெலும்பு
கூன் விழுந்து கிடக்கிறது
இந்திய நாட்டுக்குள்ளே

பாண்டிய ராஜ்

மேலும்

உண்மைதான்..எழ வேண்டியவர்கள் விழுந்து கிடக்கும் வரை எதிலும் மாற்றம் என்பது இல்லை 10-Sep-2016 5:58 am
பாண்டிய ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 9:38 pm

தேவதை உலகம்

அவள் உலகம்
அப்படி ஒரு அழகு
செல்லக் கடி கடித்து
சின்னதாய் சிரிப்பாள்

ஓயாமல் சத்தமிடுவாள்
காதோரம் சத்தம் தான்
கடுமையான கோபத்தை
கரைக்கும் மருந்தாய்

சின்ன சின்னதாய் வாங்கி
மொத்தமாய் சேர்த்த
அழகு பொம்மைகளின்
அணிவகுப்பு அத்தனை அழகு

அவள் செய்யும் சமையல்
அரிசி இல்லாமல் சாப்பாடு
காய்கறிகள் இல்லாத குழம்பு
அத்தனையும் அழகு

ஒய்யார நடையோடு
மிடுக்கான பார்வையோடு
எங்களை தீண்டும் அவள்
அளவில்லா அழகு

அடடா அவள் சிரிக்கிறாள்
என்றுதான் நினைக்கிறார்கள்
யாருக்கு தெரியும் அவள் அழகு
தேவதை என்று
பாண்டிய ராஜ்

மேலும்

உண்மைதான்..குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் உளியின்றி நினைவை செதுக்கிறது 10-Sep-2016 5:48 am
பாண்டிய ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 9:24 pm

சென்ரியூ

போற போக்கில்
உயிரை கொடுத்தது
ஆத்தோர மரம்
பாண்டிய ராஜ்

மேலும்

பாண்டிய ராஜ் - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 9:41 am

தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....

மேலும்

மிகவும் சரியான கருத்துக்கள்.....தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்... 28-Aug-2016 12:11 pm
இருவரும் நான் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்டே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை . சிறிதும் பொறுமை இன்மை . அவசரம் . எதையும் துணிந்து பேசுவது ,செய்வது . ஒருவரை இன்னொருவர் ஏளனம் செய்து தான் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வது . ஒருவர் மற்றவரை குறைத்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது . இப்படி பல காரணங்கள் உள்ளன தோழி . இதற்கு , ஒரேவழி சகிப்புத் தன்மையும் , பொறுமையும் மட்டுமே . இவை இருந்தால் இன்று விவாகரத்திற்கு இடமே இருந்து இருக்காது. என்பது என் எண்ணம். 15-Aug-2016 4:31 pm
சரியாக கூறினீர்கள் தோழி.......தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் இனிய நன்றிகள்...... 11-Aug-2016 7:10 am
அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ...... 10-Aug-2016 11:17 pm
பாண்டிய ராஜ் - பாண்டிய ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 9:03 am

பணமரம் முளைத்தால்

பணமரம் முளைத்தால்
சாலையோரம் சேரும்
குப்பை மூட்டைகள்
களவு போய்விடுமே

நம் தேசத்து பூமி
இயற்கையின் அங்கமாக
சிறந்து விளங்கிவிடுமே

ஒவ்வொரு நில தரகரும்
விவசாயம் செய்து
கோடி கணக்கில் நடவு செய்து
கோடீஸ்வரனா ஆவானே

பணம் சேக்க பட்டணத்துக்கும்
கடன அடைக்க கடல் தாண்டியவனும்
ஊருக்குள்ள வந்துருவானே

ஒரு பிடி சோற்றுக்கு
வழி இல்லாதவன் கூட
நட்டுவைப்பானே நாத்து

பணமரம் முளைத்தால்
வீதியோரமாய் அழகாய்.
பூத்த பூக்கள் எல்லாம்
அதிசய பொருளாகுமே

கட்டு கட்டாக சேர்க்க
கட்டையை உடைத்து
நட்டு வைப்பானே
பணமரத்தை

பாண்டிய ராஜ்

மேலும்

ஆம் உறவுகளே 09-Aug-2016 7:04 pm
பணம் காய்க்கும் மரத்தைக் கண்டால் ... அதை பாதுகாக்க வந்திடுவான் அரசியல் வாதி! அப்பவும் விவசாயி ஏழைதான்...! 08-Aug-2016 10:38 pm
பணமே உலகின் தீராத ஆசை 08-Aug-2016 11:51 am
பாண்டிய ராஜ் - பாண்டிய ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2016 7:01 pm

எப்படி மனதிற்குள் நீ
வந்து விட்டாய் என்பதை
இதுவரை எனக்கும் எந்தன்
இதயத்திர்க்கும் தெரியாது

இருந்தும் வந்து விட்டாய்
என்பதற்கு சில அடயாலம்
என்னிடத்தில் உள்ளது
என் அன்பு காதலி

இமைகள் மூடிய பின்னும்
உன் பிம்பம் தான்
என் கண்களுக்கு
காட்சி தருகிறது

கன நேரம் தான் அன்பே
உன் நியாபகங்களை
மறந்து இருக்க ஆசைபட்டேன்
தோற்றது நானே

தினமும் நீ காட்டிய
அழகான குரும்புகள்
மரணத்தின் பின்பும்
மறக்க முடியாதடி

அட போடா பைத்திய கார
என்றுதானே சொல்லி
கட்டிபிடித்து அழுதாய்
காதல் சொல்கையில்

தேவதையே கழங்காதே
பிரமன் என்மீது கோவபட்டு
சாபம் விட்டாளும்
விட்டு விடுவான் அன்பே

மேலும்

அழகு கவி! சின்ன சின்ன சண்டைகளில் உள்ளத்தின் பிணைப்பு இன்னும் இறுகிவிடும். வாழ்த்துக்கள் .... 01-Aug-2016 7:51 am
அறியாத வடிவில் புரியாத விதத்தில் உள்ளம் தொலைவது தான் காதல் 01-Aug-2016 2:50 am
பாண்டிய ராஜ் - பாண்டிய ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2016 11:32 pm

அப்பா அப்பா என்ற
அழுகை குறள் ஒலிக்க
மயங்கி கிடந்தான் தந்தை
போதையில் சூழ்ச்சியோ

காய்ந்த வயிறு அண்ணத்துக்கு
வழி இல்லை இருந்தும்
போதையில் மயக்கம்

பசியிலே வாடும் பிஞ்சு
குழந்தைகள் தேனீர்க்கு கூட
வழி இல்லை இருந்தும் மயக்கம்
போதையில் தந்தை

புத்தி கொண்டவன்
செய்யும் வேலையா இது

வீட்டில் கஞ்சிக்கு வைத்த
உலையில் கொதிக்கிதம்மா
தண்ணி கூடவே என் வயிறும்


அரிசி வாங்க போன கணவன்
போதையில மயங்குனது
எதிர் வீட்டு பிச்சு பூ
சொன்னத கேட்டு

வயித்துல அடிச்சுகிட்டு
கதிரி அழுகிரா
வாழ்க்க வீனா போச்சேனு
வயித்து புல்லகாரி
கவிஞன் பாண்டிய ராஜ்

மேலும்

மதுவின் அவலத்தை வெளிப்படுத்தும் வலிகள்..பலரின் வாழ்க்கையை காவு வாங்கிய திரவம் 14-Jul-2016 5:46 am
மேலும்...
கருத்துகள்

மேலே