விவசாயம்

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள் என்பதை
மறந்து போன பரம்பரை
விவசாயி தான்

அமோக விலைச்சல் தான்
அருந்தும் ஈட்ட முடியவில்லை
போட்ட முதலீட்டையும் கூட

அறுவடை முடிந்து
கருத அடித்து போட்டு
தூசி தட்ட தூவிய போது
கூடவே போகிறது அவன் உழைப்பு

உழைத்து உழைத்து கலைத்த
உழவன் இங்கு இருக்க
ஊமையாய் இருக்கிறது மனிதம்
உழவன் மாண்டதை கண்டும்

அதி வேகமாய் வீசும்
புயல் காற்றை பொலத்தான்
அனுதினமும் உழைத்து
கலைத்து போகிறான் உழவன்

யாரோ கண்ட அதிசய
கனவு போலவே இருக்கிறது
கலாம் கண்ட வல்லரசு கனவு

இந்திய முதுகெலும்பு
கூன் விழுந்து கிடக்கிறது
இந்திய நாட்டுக்குள்ளே

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (9-Sep-16, 10:45 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : vivasaayam
பார்வை : 762

மேலே