தினம் ஒரு பாட்டு இயற்கை - 36 = 218
வான்மகளுக்கு சால்வை சாத்தும்
வெண்மேக சரடுகள்
வெள்ளாவி வைக்காமல் - எந்த
வாஷிங்மெஷின் வெளுத்ததோ…?
மலைமகள் மீது தூக்கம் போடும்
மழைமேக பரல்கள்
தூரிகை பிடிக்காமல் – எந்த
கம்ப்யூட்டர் வரைந்ததோ…?
மார்கழி திங்களில்
பனிபொழியும் மேகங்கள்
குளிர்கருவி இல்லாமல் – எந்த
என்ஜினியர் வடித்ததோ… ?
கார்த்திகை மாதத்தின்
காரிருள் சோகங்கள்
சோமாலிய நாட்டவனின்
சோஸலீச கோஷங்களோ ?
சித்திரை வைகாசியில்
சுட்டெரிக்கும் வெப்பங்கள்
கர்ப்பிணி தாரகைகளின்
லேபர் பெயினோ ?
நீர்நிலைகள் மேல் தளத்தில்
மேக மந்தை ஊர்வலங்கள்
காஷ்மீர எல்லைகளின்
மிலிட்டரி படைகளோ ?
விமானங்களை முத்தமிடும்
விண்முகில் தேவதைகள்
காற்றுக் கன்னிகளின்
ஓசோன் படலங்களோ ?
சூரிய சந்திர நட்சத்திரர்களின்
கேப்மாரி தனங்களை மறைக்கும்
விரிவான் குளத்தின் கிளவுடுகள்
காலில்லாத கிரவுன்களோ ?
மேகத்தை ஒதுக்கிவிட்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ப்ரிட்ஜ் கட்ட நாசாவால் முடியுமா ?
மேகமகள் இல்லாமல்
மழைதானம் பெற்றால்
எர்த்துக்கு ஈட்டு குறையுமா ?
மேகத்தின் மூச்சு காற்றை
சுவாசிக்கத் தெரியாத ஸ்கைக்கு
ஸ்லோமோஷனில் ஓடத்தெரியுமா ?
மேகத்தினுள் நுழைந்து
தாகத்தை தீர்த்துக்கொள்ளும்
சாதக பறவைகளிடம்
லெஸன்கள் பயில விருப்பமா ?
வாருங்கள் விமானப்பயணம்
செல்லுங்கள் நெடும்பயணம்
உலகின் எங்கேனும் ஒருமூலையில்
நமக்கான விருப்பங்கள் நிறைவேறும்.