ஹைக்கூ கவிதை

முறிந்த மரம்
நினைவுபடுத்தியது
ஊஞ்சல் விளையாட்டு

பலத்த காற்று
துளியும் பயன் இல்லை
பட்டு போன மரம்

அடர்ந்த காடு
பயமுறுத்துகிறது
யானையின் கால்தடம்

வெள்ளாமை வயல்
பெரிதாக வளர்ந்தது
கட்டிடம்

காய்ந்த இலைகள்
விழுந்ததும் வளர்கிறது
வசந்தகாலம்

ஊற்ற ஊற்ற
ஈர்த்தது தண்ணீர்
கோடை வெயில்
பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (23-Nov-16, 7:50 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 209

மேலே