படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தாயில்லாக் குழந்தை
தானே சமைக்கின்றது
பசியாற !

வேண்டாம் ஊதுகுழல்
வீசிவிட்டு
ஏந்து பாடப்புத்தகம் !

உலை கொதித்து
சோறு பொங்கி
உண்ணவேண்டும் !

கொடிது கொடிது
வறுமை கொடிது
வாடிடும் சிறுமி !

உதவிட யாருமில்லை
ஆதரவற்ற சிறுமியின்
அல்லல்காட்சி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி ! (23-Nov-16, 8:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 91

மேலே