கவிதை
பணமரம் முளைத்தால்
பணமரம் முளைத்தால்
சாலையோரம் சேரும்
குப்பை மூட்டைகள்
களவு போய்விடுமே
நம் தேசத்து பூமி
இயற்கையின் அங்கமாக
சிறந்து விளங்கிவிடுமே
ஒவ்வொரு நில தரகரும்
விவசாயம் செய்து
கோடி கணக்கில் நடவு செய்து
கோடீஸ்வரனா ஆவானே
பணம் சேக்க பட்டணத்துக்கும்
கடன அடைக்க கடல் தாண்டியவனும்
ஊருக்குள்ள வந்துருவானே
ஒரு பிடி சோற்றுக்கு
வழி இல்லாதவன் கூட
நட்டுவைப்பானே நாத்து
பணமரம் முளைத்தால்
வீதியோரமாய் அழகாய்.
பூத்த பூக்கள் எல்லாம்
அதிசய பொருளாகுமே
கட்டு கட்டாக சேர்க்க
கட்டையை உடைத்து
நட்டு வைப்பானே
பணமரத்தை
பாண்டிய ராஜ்