தேவதை
தேவதை உலகம்
அவள் உலகம்
அப்படி ஒரு அழகு
செல்லக் கடி கடித்து
சின்னதாய் சிரிப்பாள்
ஓயாமல் சத்தமிடுவாள்
காதோரம் சத்தம் தான்
கடுமையான கோபத்தை
கரைக்கும் மருந்தாய்
சின்ன சின்னதாய் வாங்கி
மொத்தமாய் சேர்த்த
அழகு பொம்மைகளின்
அணிவகுப்பு அத்தனை அழகு
அவள் செய்யும் சமையல்
அரிசி இல்லாமல் சாப்பாடு
காய்கறிகள் இல்லாத குழம்பு
அத்தனையும் அழகு
ஒய்யார நடையோடு
மிடுக்கான பார்வையோடு
எங்களை தீண்டும் அவள்
அளவில்லா அழகு
அடடா அவள் சிரிக்கிறாள்
என்றுதான் நினைக்கிறார்கள்
யாருக்கு தெரியும் அவள் அழகு
தேவதை என்று
பாண்டிய ராஜ்