நினைவில் நீ
தொலைக்காட்சி
தொல்லை காட்சியாகி
விட்டது ...
தொலைவில் நீ ....
மலையுச்சி
மரத்தின் உச்சியாகி
விட்டது ...
மனதில் நீ ...
தீக்குச்சி
தித்திக்கும் குச்சி மிட்டாயாகி
விட்டது...
அருகில் நீ ....
நீர்விழ்ச்சி
நினைவின் வீழ்ச்சியாகி
விட்டது
நினைவில் நீ ....