அப்பா

அப்பா

என்னையும் என்னை
சுமந்தவளையும் பேனி காத்த
கண்பட்ட தெய்வம் அப்பா

கண்ணக்குழியில் முத்தமிட்ட போது
காயப்படுத்திவிடுமோ என்று
மீசையை துறந்த மிட்டாசு
காரர் என் தந்தை

அவருக்கு பிடித்த புகையிலை
இன்று அவர் விரல்கள் கூட
அதை தொட அனுமதிப்பதில்லை
காரணம் எனக்கு பிடிக்காது

என்னிடம் முத்தம் வாங்க
எத்தனை திருட்டுத்தனம்
அத்தனையும் அழகு தான்
கோவில் திருவிழாவில்

கொடிக்கம்பம் ஏற்றுவது போல்
என்னை அவர் தோல்கள்
தாங்கிய நாட்க்கள்

பசியின் வலியினை மட்டும்
அவர் வைத்துக்கொண்டு
வயிறார அண்ணம் இடுவார்
எப்போதும் எங்களுக்கு

விழா நாட்களில் எப்போதும்
எங்கள் உடலை அலங்கரிக்கும்
புத்தம் புதிய அழகான
ஆடம்பர ஆடைகள்

ஆனால் அவர் மட்டும்
அதே கிழிந்த சட்டையில்
புதிதாக வந்த ஓட்டையை
அடைத்த ஒட்டு போட்ட சட்டை

முன்பு ஆணாதிக்க சமூகம்
இப்போது பெண் ஆதிக்க சமூகம்
இடையில் எப்போதும்
பண ஆதிக்க சமூகம் தான்

என் பசி போக்க அவர்
கைகட்டி நின்ன நாள்
நான் பட்ட வேதனைகள்
அக்கனம் முதல் சுகமானது

எப்படியாவது அவரை
ஓய்வெடுக்க வைக்க வேண்டும்
என்ற ஒரே நோக்கத்தோடும்
ஓடும் குதிரையானேன்
பாண்டிய ராஜ்

எழுதியவர் : kavigar பாண்டிய ராஜ் (23-Mar-17, 8:28 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : appa
பார்வை : 368

மேலே