விழிச்சாரல்
விழுந்த உடனே
விளைந்து விட்டேனடி
உன் விழிச்சாரலில்...........
கோடை வெயிலிலும்
குளிர்கிறேனடி
உன் கொஞ்சிப் பேசும்
விழிகளால்...........
இரு விழிக்கு மத்தியிலே
நிலவை சூட்டியவளே......
என் இதயக் கூட்டினிலே
உன் விழிகளை குடியேற
வைத்து விட்டு
நீ மட்டும் விலகி நிற்காதே..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
