விஜிவிஜயன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜிவிஜயன் |
இடம் | : வந்தவாசி தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 07-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 233 |
புள்ளி | : 34 |
M.sc IT.,
வட்டமிடும் தோகை மயிலாய்
வஞ்சி அவள் காலை தழுவி
கொஞ்சி பேசும் கிள்ளை மொழியால்
என் பிஞ்சு மனம் நோகுதடி
சிறகில்லா பறவையாய்
வானுயர சென்றவள்
துயரங்கள் பல கடந்தும்
கோபுரமாய் நின்றவள்
தாயாகி சேயாகி
தோழியாகி பின் யாதுமாகி
தாரமாய் வந்தவளை
வாழ்த்தி வணங்க வேண்டாம்
வீழ்த்தாமல் இருங்கள்
விதையாய் விளைவோம்
உள்ளம் பேசும் உணர்வுகளை
கள்ள மொழி பார்வையாலே
என்னுள் செலுத்திவிட்டு
கற்பனை கனவோடு
செல்லும் என் நாட்களை
விழியோர கண்ணீரால்
நிரப்பி விட்டு
நெடுந்தூர பயணத்தில்
நீளும் என் இரவுகளை
மேலும் வலுப்படுத்தி தவிக்கும்
உன் நினைவுகள்
சுட்டெரிக்கும்
உன் பார்வையை
கடந்தும்
தினம் நீ செல்லும்
திசையெல்லாம்
திரும்பி பார்க்கிறேன்.........
பார்க்க மனமில்லாமல்
நீ சென்றாலும்
உன் பார்வை படும்
தொலைவில்
என் பயணம் இருக்கும்......
துளித்துளியாய் சேகரித்த
உன் நினைவுகளை
ஒரு நொடியில்
உடைத்து விட்டுச் சென்றவளே
உடைந்த
ஒவ்வொரு துண்டுகளும்
உன்னையே நினைக்குதடி
என் உயிரே.........................
கால்தடம் பதிந்த
இடத்திலெல்லாம்
நம் பெயரை
எழுதி வைத்தேன்......
கை கோர்த்த
இடத்திலெல்லாம்
நம் நினைவுகளை
விதைத்து விட்டேன்.....
கதை பேசி அமர்ந்த இடத்திலெல்லாம்
நம் கனவுகளை
தொலைத்து விட்டேன்.....
நாம் என்ற சொல்லை
உணரும் முன்னரே
நான் என்ற சொல்லாய்
பிரிந்து விட்டேன்......
பிரிந்த பின்பு
பொருள் இல்லாமல்
தனித்து நிற்கிறேன்.....
இமைகள் நான்கும்
ஏதேதோ பேச
இதழ்கள்
மட்டும்
வார்த்தையின்றி
தவிக்க
இடையில்
அரங்கேறும்
மௌன ராகம்....
விழுந்த உடனே
விளைந்து விட்டேனடி
உன் விழிச்சாரலில்...........
கோடை வெயிலிலும்
குளிர்கிறேனடி
உன் கொஞ்சிப் பேசும்
விழிகளால்...........
இரு விழிக்கு மத்தியிலே
நிலவை சூட்டியவளே......
என் இதயக் கூட்டினிலே
உன் விழிகளை குடியேற
வைத்து விட்டு
நீ மட்டும் விலகி நிற்காதே..........
பலரின் தனிமைகளே கவிதைகளாய் மொழிபெயர்கின்றன.
சிப்பிக்குள் குடியிருந்த முத்தே
ஐந்திரண்டு திங்களாய்
காத்திருந்தேன்....
உன் வரவுக்காக...
நானும் புதிதாய் பிறந்தேனடி
உன்னை கைகளில்
ஏந்தும்போது....
தந்தையின் தாயுணர்வை
உணர்கிறேன்
என் மார்போடு
துயில் கொண்ட போது...
பூமியில் பூத்த புதுமலரே
என் மடியில் தவழும்
உயிர் ஓவியம் நீ...
முழுநிலவாய் தோன்றிய
உன்னை
முதல் முறையாக
முத்தமிடுகிறேன்...