தோழமை

உடன் பிறக்கவில்லை
நீ என் உறவும் இல்லை
ஆயினும்
என் புன்னகையின் வெளிச்சமாய்
கண்ணீரின் கைகுட்டையாய்
என்றும் என்னுடனே
பயணித்தாய்
துணை யாரும் இல்லாத போதிலும்
ஒருநாளும் கலங்காது நின்றேன்
என் தோழன் வருவான் என்று

எழுதியவர் : விஜிவிஜயன் (2-Mar-22, 2:24 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : tholamai
பார்வை : 590

மேலே