கடந்தகாலம்

தனிமையின்
வெறுமையை போக்கிட

இசையை கேட்ட
போதெல்லாம்

எங்கோ
கேட்ட வரிகள்

நினைவிருக்கிறதா
உனக்கு

நீயும் நானும் பயணிக்கும்
போது சேர்ந்து ரசித்த
பாடல்கள் அவை

சிறு புன்னகையோடு
உதடுகளோ
முணுமுணுக்க

தனிமை மட்டும்
அகலவில்லை

பிரிவின் தாக்கம் தான்
அதிகரித்தது

விழியோரம் வழியும்
ஒரு துளி
கண்ணீர் போதும்

கடந்த காலம்
முழுவதையும்
மீட்டெடுத்து

நிகழ்காலத்தை
மறப்பதற்கு

எழுதியவர் : விஜிவிஜயன் (19-Feb-22, 7:33 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : kadanthakaalam
பார்வை : 134

மேலே