கலப்பிடமில்லாத காதல்
இடுகாடு இட்டு சென்றால் - வாழ்வின்
இடிபாடுகள் மறைந்து போகும்.
சுடுகாட்டில் சுடலை வைத்தால் - உந்தன்
சுடுநினைவுகளும் எரிந்து போகும்.
அதுவரை எனதாத்மா என்றும்
முகாரியைத்தான் பாடிக்கொண்டிருக்கும்.
ரயில் பாதைகள் எங்காவது
இணைந்திருக்கிறதா?
தொடுவானம் எங்காவது
தொட்டிருக்கிறதா?
கருகியமொட்டு எங்காவது
மலர்ந்திருக்கிறாதா?
உடைந்த காதல் எங்காவது
சேர்ந்திருக்கிறதா?
போ...போ...
எல்லாவற்றிலும் போலி...
எல்லாவற்றிலும் பொய்...
எல்லாவற்றிலும் கலப்படம்
சாப்பிடும் உணவில் கலப்படம்...
விளையும் பயிர்களில் கலப்படம்
மூச்சுவிடும் காற்றில் கலப்படம்...
எல்லாவற்றிலும் கலப்படம்
காதலில் மட்டும்
கலப்படமில்லாத காதல்
எங்கிருந்து வரப்போகிறது?