எனக்குள் நானே

நான் எனும் இப்பிறவி
எத்தனை துன்பங்களை கடந்த போதிலும்
ஓய்ந்து போகாமல்
எதிர்வரும் சோதனைகளையும் ஏற்றுக்கொண்டு
எந்தவித களிப்பும் இல்லாமல்
கண்ணீரும் இல்லாமல்
ஒருவித அமைதியை தழுவும் இந்த மனமோ
கலங்க நேரமில்லாமல்
கடந்து கொண்டே போகிறது
ஒவ்வொரு நாட்களையும்

எழுதியவர் : விஜிவிஜயன் (20-Oct-22, 2:01 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : enakkul naaney
பார்வை : 166

மேலே