தந்தையின் தாலாட்டு

சிப்பிக்குள் குடியிருந்த முத்தே
ஐந்திரண்டு திங்களாய்
காத்திருந்தேன்....

உன் வரவுக்காக...

நானும் புதிதாய் பிறந்தேனடி
உன்னை கைகளில்
ஏந்தும்போது....

தந்தையின் தாயுணர்வை
உணர்கிறேன்
என் மார்போடு
துயில் கொண்ட போது...

பூமியில் பூத்த புதுமலரே
என் மடியில் தவழும்
உயிர் ஓவியம் நீ...

முழுநிலவாய் தோன்றிய
உன்னை
முதல் முறையாக
முத்தமிடுகிறேன்...

எழுதியவர் : விஜிவிஜயன் (26-Feb-17, 11:28 am)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 134

மேலே