கல்லூரி நாட்களில்

காலம் என்னும் ஓடத்தில்
கவலை மறந்த மீன்களாக
நண்பர்கள் ஒன்றாக இனைந்தோம்!
கல்லூரி நாட்களில்,

ஆணும் பெண்ணும் சமம்
என்ற சமதர்மத்தினை
கண்களால் கண்டதே எங்கள்
கல்லூரி நாட்களில் தான்,

வாழ்வின் கவலைகள் எல்லாம்
கண்ணீராக மாறிய காலத்தில்
கண்ணீரை துடைக்க
கணக்கின்றி வந்தது
நட்புகளின் கைகள்!,

அறிமுகம் என்னவென்று
தெரியவில்லை
ஆறுதல் என்று யாருமில்லை
உறவுகள் என்று ஏதுமில்லை
இருந்தும் உரிமைகள் அதிகமானது
நண்பர்கள் மத்தியில்!,

நண்பர்கள் ஒன்று சேர்ந்து
மரத்தடி நிழலில் மனம் விட்டு
பேசுகையில் மலராக உதிர்ந்தது
மனதின் பாரங்கள்,

சாலை ஓர பூக்கள் எல்லாம்
சில சமயம் தலைசாய்ந்து
ஏங்கி பார்த்தது!
எங்களுக்கும் இதுபோன்று
நட்புகள் இல்லையென்று!!,

வின்மீன் கூட்டங்களும் பல நேரம்
விடாமல் பொறாமை கொண்டது!
விரல் பிடித்து செல்லும்
எங்களின் நண்பர்களைக் கண்டு!!,

சந்தித்த நாள்முதல் சிறிதும்
சிந்திக்கவில்லை பிரிய
இருந்தும் இன்று
காத்துக் கொண்டிருக்கின்றோம் பிரிய!,


மாறிவரும் காலத்தில் எத்தனையே
நிகழ்வுகளில் மாற நினைத்தோம்!
மறக்க நினைத்தோம்!!,
ஆனால் மனம்
மாறவும் விரும்பவில்லை
மறக்கவும் விரும்பவில்லை
கல்லூரி நாட்களில்...................
...................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Mar-17, 8:08 pm)
Tanglish : kalluuri natkalil
பார்வை : 444

மேலே