தொப்பி
அரசன் வளர்த்த குரங்கு
கிரீடம் அணிய துடித்தது
அரசன் இறந்த பின்னே
எடுத்துக் கொண்டு சென்றது
தாறுமாறாய் சுற்றியது நழுவி
குளத்தில் கிரீடம் விழுந்தது
மூளையில்லா குரங்கு குளத்தில்
முங்கிமுங்கி பார்த்தது
கிரீடம் எங்கோ மறைந்தது
தொப்பி ஒன்று கிடைத்தது
வழியில்லா குரங்கும் அதை
எடுத்துக் கொண்டு சென்றது
கிரீடம் திருடிய தவறுக்காய்
கல்லடியும் மேலே பட்டது
பேராசை பெரு நஷ்டம்
உணர்ந்தால் வருமா கஷ்டம்