குருதி தாகம்
அஸ்தமிக்கும் சூரியனைக் கண்ட கயவர் கூட்டம்,
தங்களைக் கண்டு சூரியனே பயந்து ஓடிச் சென்று மலைக்குப் பின்னால மறைந்து விட்டதாய் மார்தட்டிக் கொண்டது காரிருள் சூழ்ந்த இரவினிலே....
குருதி தாகம் அடங்காத அந்தக் கயவர் கூட்டம் மிருகங்களை உற்சாகமாக வேட்டையாடுவது போல், மனிதர்களை வேட்டையாடுவதைக் கண்ட ஆந்தைகளும் அலறின உயிர்நேயத்தோடு...
விடியல் எப்போதென்று
பாவலரும் பல பாக்கள் புணைய,
ஓவியரும் பல உயிர்நேய ஓவியங்கள் வரைய,
போதகரும் உயிர்நேயம் போதிக்க,
யாவற்றை காதில் வாங்காது, கண்ணால் காணாது,
குருதி குடிப்பதிலேயே கவனமாய் இருந்தது அந்தக் கயவர் கூட்டம்...
எங்கும் கயமைத் தாண்டவம் ஆட,
கற்பழிப்புகள் அரங்கேற,
ஒழுக்கமென்பதே சிறிதுமில்லாத அந்த கயவர் கூட்டத்தை எதிர்த்து, இளையோர் விழித்தெழுந்தனர் வீரத்தோடு...
கையில் வாளெடுத்து, கயவரின் தலையறுத்து,
குருதி குடித்தோரின் குருதி குடித்தும் குருதி தாகம் அடங்காது மேலும் குருதி வேண்டிக் கொடூரமாக வேட்டையாடின வெறி பிடித்த வேங்கைகளாய்...
இந்திய நாடே மயானமாகும் நேரம், கிழக்கிலே செந்நிறக் ஒளியோடு பிரசவித்த சூரியன், நிகழ்ந்த அநீதி கண்டு கோபம் கொண்டதாலே யாவும் சாம்பலாயின சூரியன் உமிழ்ந்த தீயாலே....