மழை

ஏலே பாரு காத்துல
வானம் மிதக்குது

வானம் பாத்த பூமியில்
மேகம் கருக்குது

மேகம் கொண்ட
மோகம் மழை பொழியுது

தாகம் கொண்ட
மனதில் சாரல் அடிக்குது
மழலை போலே மனம் தான் துள்ளி குதிக்குது

பட்ட மரத்தில் பால் சொறியுது
பாலை நிலத்தில்
புல் முளைக்குது

தேகம் சிலிர்க்குது
நெஞ்சம் நிறையுது
பூமி நனையுது
இரு உயிர்கள் கூடு சேருது
பூ மழை பொழியுது
பூ பூமியில் மலருது
அன்றிலே அன்றிலும் கலக்குது
பறவைகள் சிறகை விரிக்குது
தன் கூட்டிலே வாழ்க்கையை நடத்துது

பூமி குளுந்தாச்சி
மக்கள் பஞ்சம் போயே போயாச்சி
வேர் விட்டு வளரும்
சிறு மொட்டு

கடவுளை
காணுகின்றேன்
இன்று
கார் முகிலில்


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jul-16, 7:57 pm)
Tanglish : mazhai
பார்வை : 617

புதிய படைப்புகள்

மேலே