இயற்கையோடு வா வாழலாம் அன்பே

உலகில் பிறந்தது
உலகை உன்னோடு இரசித்து
வாழ
வா இருவரும்
போவோம்
உலகை சுற்றி வருவோம்

புத்தக புழுவாய் இருக்க விருப்பமில்லை
பூவை நுகரத் தான் மனம் ஏங்குகிறது

உலக அறிவை ஒரே அறையில் உட்கார்ந்து அறிய
வெறுப்பாக உள்ளது
ஊர் ஊராக சென்று
அங்கேயே தங்கி அறிந்துகொள்ள மனம் ஆவல் கொள்கிறது

செல்லும் இடங்களை எல்லாம் பார்த்து ரசித்து
அவ்வூரின் சிறப்புகளை
எல்லாம் அறிந்து
சேர்ந்து நாம் போவோம்

காஷ்மிருக்கு போய்
பனிமலை ஏறி
ஆப்பிளை பறித்து
உண்போம்

தஞ்சாவூர் சென்று
பிரகதீஷ்வரரை வழிபடுவோம்

கொடைக்கானல் போய்
காடுகளில் தங்குவோம்

கன்னியாகுமரி
போய் கடலில் குளித்து
அப்படியே
குமரி நாட்டை தேடுவோம்
முத்துக்குளித்து

ஒரு குளியல் போடுவோம்
இருவரும்
நையகரா நீர்வீழ்ச்சியில்

ஏற்காடு சென்று
ஒரு போர்வை
போர்த்திக்கொண்டு
இருவரும்
கைகோர்த்து ஏறுவோம் மலையை

மாமல்லபுரம்
சிற்பங்களை
பார்த்து லயித்து
சிலையாகிடுவோம்

காவிரி ஆற்றில்
குளித்து விளையாடிடுவோம்

மாட்டுவண்டி
கட்டி சந்தைக்கு
போவோம்

கங்கையில் குளித்து
புனிதமாவோம்

தாஜ்மகாலில்
தங்கி
காதலிப்போம்

ஊட்டி மலை
இரயில் ஏறி
காடுமலையை காதலிப்போம்

மதுரை
ஜிகிர்தண்டாவை
ருசிபார்ப்போம்

கம்போடியா
சென்று
தமிழ் கோவிலை
வணங்கி வருவோம்

பட்டாம்பூச்சிபோல்
பறப்போம் வானில்
எல்லைகள் நமக்கில்லை
எல்லைகள் கடந்து
சுற்றிவருவோம் உலகை

தடைகள் கடந்து
போகும் பறவைகள் நாங்கள்

வெள்ளைமாளிகை
போய் வருவோம்
கொள்ளை அழகை
கண்டுவருவோம்
வான் வெளியில்

சாரல் வீசும்
குற்றாலம் அருவியில்
குளித்து மகிழ்வோம்
பிருந்தாவனம்
சென்று
அரவணைத்து முத்தமிட்டே
உன் மடி தூங்குவேன்
செங்கோட்டை சென்று
கொடி ஏற்றுவோம்
இலங்கை சென்று தமிழர்களை
பார்த்துவருவோம்
மலேசியா போய்
காவடி எடுப்போம்
துபாய் சென்று
ஒட்டகத்தில் ஏறி
பாலைவனத்தை சுற்றுவோம்
பேரீச்சம் பழம் சாப்பிடுவோம்

உடைகள் இல்லா காட்டுவாசிகளாகி
நீயும் நானும்
அமேசான் காட்டில்
ஆதிகால வாழ்க்கை வாழ்ந்து வருவோம்
பொன்னியின் செல்வனில்
வரும் இடங்களுக்கெல்லாம் போய்வருவோம்

ஒரு போர்வைக்குள்
இரு உடல் போர்த்திக்கொண்டு
தூங்குவோம்
உடல்களையே பார்க்கும்
மனித பதர்களுக்கு
தெரியாது
அன்பு என்றால்
உங்கள் தோளில்
எனை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு செல்லுங்கள்

கால் வலித்தால்
தூக்கிக்கொள்ள வேண்டும்

நிழல் ஒதுங்கும் பொழுது
மடி தர வேண்டும் நான் தூங்க

உன் முச்சுக்காற்றையே
எப்பொழுதும் நான் சுவாசித்து உயிர் வாழ வேண்டும்

உலகம் என்பது
அன்பானவர்களுடன்
அன்பை பரிமாறி
உலகை ரசிப்பது
அதை நாம் செய்வோம்
அணுஅணுவாய் ரசித்து

எனக்கு உன்னோடு
பயணம் போக மிகப்பிடிக்கும்

நீயும் நானும் தனியாக
மனம் விட்டு
இயற்கையை
ரசித்துகொண்டு நிறைய பேசவேண்டும்
உன் பாதையாகிட வேண்டும்
உனை உச்சி முகர்ந்துகொண்டே
இருக்க வேண்டும்

மழை சத்தம்
வயலின் இசைக்கிறது
காடுகள்
பூக்களை நீட்டுகிறது
வயல்கள்
நெல்மணியை தருகிறது
கடல்
நாம் தூங்க கரை தந்தது

ஊரை சுற்றிபார்க்கும் பொழுது
முதன் முறையாக
ஆச்சரியத்தில்
திக்கு முக்காடி
சந்தோஷப்படுகையில்
அதை சொல்ல வார்த்தை இல்லை
அருகில் நீ வேறு
மகிழ்ச்சியில்
கட்டிக்கொள்கிறேன்

வழியில்லா காட்டில் தங்கி படுப்பதும்
பாதையில்லா மலையில்
ஏறி விண்மீனை
இரசிப்பதும்
என்றும் ஆனந்தமே

மலையும் காடும்
அருவியும்
பூந்தோட்டமும்
ஒன்றாக
அதில் நாம் தங்கினால்
எப்படி இருக்கும்

பூக்களை நுகர்ந்து
மூங்கிலை வெட்டி
புல்லாங்குழல் செய்து இசையை கேட்கையில்
தாயை அரவணைக்கயில் வரும்
உணர்வு
காடு மலைகளில்
நாம் பயணிக்கும் பொழுது எப்பொழுதும் புதிதாய் உலகம்

வா அன்பே
போகலாம்
கையை பிடி
வா சுற்றி வரலாம்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Jul-16, 12:44 am)
பார்வை : 920

மேலே