வாழ்க்கை வாழ்வதற்கே
வெற்றியும் தோல்வியும்
சுழலும் வாழ்க்கையில்
வந்து போவன
சுகம் தொடர்ந்து
சோகம் வரும்
பிறப்பை தொடர்ந்தே
ஒரு நாள் இறப்பு
வருதல் போல்
சோகம் வந்து
தாக்கும் போது
தளர்ந்து விடாதே
எதிர் நீச்சல் போட்டு
மீண்டு விடு
ஒரு போதும்
மனம் நொந்து
மரணத்தின் எல்லையை
அகாலமாய் தொட்டுவிடாதே
அது கோழைகள் வழி
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்ந்து காட்டு