மனதுக்கு பிடித்தவர்கள்
எல்லோரிடமும் பேசுகிறோம்
பழகுகிறோம்
சிரிக்க முடியாதபடி
மனக்கணக்குகள் அதிகம்,
பிணக்குகளும் அதை விடவே அதிகம்...!
நம் கண்கள் எல்லோரிடமும்
எதையோ தேடுகின்றவே,
என்னவெல்லாம் தேடுகின்றன
என்பது யாருக்குத்தெரியும்?
யார் பெரியவன்?
எதில் பெரியவன்?
நான் இப்படி இருக்கிறேன்?
என்னால் ஏன் முடியவில்லை?
- என உள்ளிருந்து கேட்கப்படும்
வேள்விகளில் சிக்கித்தவித்து
பேச முடிவதில்லை,
தாள முடிவதில்லை.
எனினும்
எல்லோரிடமும் சிரித்து பேசி விடலாம்.
ஆனால்
மனதுக்கு பிடித்தவர்களிடம் மட்டுமே
பேசி சிரிக்க முடியும்....
பேசாமலும் சிரிக்க முடியும்....