தமிழ் நாடு
என் தமிழ் நாடே தமிழின் தாயகமே
தமிழ், நாடு என்பதை நாம் நினைத்து
நாளும் போற்றி வளர்ப்போமே....!!!
ஆயிரம் ஆயிரம் காலம் கடந்து
அழியா புகழ் கொண்ட தமிழ் இனமே ...!!!
உன் தாயகம் இன்று தவிப்பதை கண்டு
திரண்டுவா பெரும் பேரினமே ..!!!
விதியால் பிரிந்தோம் தமிழால் இணைந்தோம்
மதியால் மண்ணை மீட்போமே.....!!!
வீரம் விதைத்தோம் வெற்றி அறுப்போம்
நாளை நமதென வாழ்வோமே...!!!