முதுமையில் ஒரு கானம் 555

வாழ்க்கை...


மௌனங்கள் கலையாத நேரத்தில்
நிலவின் முகதில்கூட சோகங்கள் படரும்...

அது அமாவாசை...

நகர்ந்து செல்லும் நிமிடங்களில்
சந்தோசம் ஓர் நூலாய் கடந்துசெல்லும்...

உண்மையான அன்பிற்காக
ஒவ்வொரு நாட்களும் ஏங்கும்...

வாழ்ந்த நாட்கள் கனவுகளாய்
வந்து போகும்...

வாழ்ந்த நாட்களை
அசைபோட்டுக்கொண்டே நகரும்...

எங்கோ கேட்கும் யாரோ
நலம் விசாரிப்பு...

வாழ்வில் பாதியாக வந்த
துணையின் பிரிவு நெஞ்சில் கணக்கும்...

கண்கள் யாரையோ
எதிர்பார்க்கும்...

மனம் தேடும் மரண
தேவனை...

வாழ்ந்த காலம் நெஞ்சில்
முதுமையில் ஓர் கானம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Oct-15, 8:29 pm)
பார்வை : 169

மேலே