எனது இந்த பயணம்

இறைவன் அமைத்திட்ட
எனதிந்து பயணம்

நிறுத்திடவும் வழியில்லை
பாதியில் இறங்கிடவும் உரிமையில்லை.

விழுவதும் எழுவதும் வழமையாகிவிட
விடுவித்து விலகிட விளைகிறது மனம்

எவ்வாறாயினும் இறைவன் கொடுத்த
எனதிந்த பயணத்தை தொடர்ந்து செலுத்திட வேண்டும்.

துரோகிகளையும் எதிரிகளையும்
எதிா்கொள்ளத் துணிவு கொள்ளாமல்

ஏமற்றங்களையும் சறுக்கல்களையும்
சுதாரிக்க சக்தியற்றவனாய்

பயணத்திலிருந்து பாதியிலெ
விடைபெற விளைந்திடும் மனதின்
ஓர விளிம்பில் வாழ்ந்திட வேண்டுமெனவும்
ஆவல் பிறக்கிறது

தொடர்ந்து செலுத்துகிறேன் பயணத்தை
என்னிலும் சிறியோர் நிலையெண்ணி

வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க எத்தனிக்கிறேன்
எனக்கு நானே ஆறுதல் அளித்தவனாய்.....

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (18-May-15, 6:06 pm)
பார்வை : 160

மேலே