ஹஸீனா அப்துல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹஸீனா அப்துல் |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 07-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 78 |
தோழமைகளுக்கு ,
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத்து தளத்திற்கு வந்திருக்கிறேன். தொழில் மற்றும் குடும்ப சூழல்கள் காரணமாக இவ்வளவு நாள் தலைகாட்டவில்லை. இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். சோகங்களிலும், வலிகளிலும் எழுதுவது போல ஆறுதல் அளிப்பது வேறென்று உண்டா எனத் தொியவில்லை...
இறைவன் அமைத்திட்ட
எனதிந்து பயணம்
நிறுத்திடவும் வழியில்லை
பாதியில் இறங்கிடவும் உரிமையில்லை.
விழுவதும் எழுவதும் வழமையாகிவிட
விடுவித்து விலகிட விளைகிறது மனம்
எவ்வாறாயினும் இறைவன் கொடுத்த
எனதிந்த பயணத்தை தொடர்ந்து செலுத்திட வேண்டும்.
துரோகிகளையும் எதிரிகளையும்
எதிா்கொள்ளத் துணிவு கொள்ளாமல்
ஏமற்றங்களையும் சறுக்கல்களையும்
சுதாரிக்க சக்தியற்றவனாய்
பயணத்திலிருந்து பாதியிலெ
விடைபெற விளைந்திடும் மனதின்
ஓர விளிம்பில் வாழ்ந்திட வேண்டுமெனவும்
ஆவல் பிறக்கிறது
தொடர்ந்து செலுத்துகிறேன் பயணத்தை
என்னிலும் சிறியோர் நிலையெண்ணி
வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க எத்தனிக்க
உணவுகளில்
சுவை மிகுந்த உணவு
எதுவென்றால்
உழைத்து களைத்து வரும் துணைவனுக்காக
பிரியமாய் சமைத்து
பேசி சிரித்து
புன்முறுவலுடன் பரிமாறப்பட்டு
ஒன்றாக அமர்ந்து
உண்ணப்படும் உணவே
அது பழைய ரசமும் துவையலுமாக இருந்தாலும் கூட
வெயிலையும் வயதையும் பொருட்படுத்தாது உழைக்க சொல்கிறது,
வறுமையிலும் வேலை நிறுத்தம் செய்ய தொியாத வயிறு...
நறுமணம் வீசும் நாயகன்.
--------------------------------------------
விரல் நுனியில் தன் குழந்தையின்
மலம் பட்ட ஆடையை எடுக்கும் ஆண்களுக்கும்
குப்பை வண்டி அருகில் வந்ததும்
மூக்கை பிடிக்கும் பெண்களுக்கும்
முன்னுதாரனமாய் ஜொலிக்கிறான்
குப்பைகளின் சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் குப்பைவண்டிக்காரன்
குப்பைகளின் மன்னனாக.
முடிக்கொன்று முகத்திற்கொன்று
உடலுக்கொன்றென நறுமண ஸ்பிரே பயன்படுத்தும்
நபர்களுக்கு புரிவதில்லை.
முழுமையாக சாக்கடையில் இறங்கும் குடிமகன்
வீதியில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தால்
நாமெல்லாம் நறுமணம் கதழ வீதியில்
நடக்க முடியாதென்பதும்
நறுமணம் வீச செய்யும் நாயகன்கள்
வயசுக்கு வந்த நாள் முதலா
வயித்தை கட்டி சோ்த்து வச்சேன்
தாலி கயித்துக்கே அது காணலியே
தங்கமோ இங்கு பெருவிலையே!
உறவாடிய உறவினரெல்லாம்
உதறித்தான் தள்ளுனாக
சீ நாயென
வாா்த்தையாலே கொல்லுனாக!
எங்கெங்கோ அலைஞ்சேனே
ஓடாய்த் தேய்ஞ்சேனே
ஒன்னும் கிடைக்காம
கவலையில காய்ஞ்சேனே!
பாிதவிச்ச நிலைய பாா்த்து
பல பேரு ரசிச்சாக
பணக்கார கிழவனெல்லாம்
விலை பேசி இங்கு வந்தாக!
பெத்த மனசு வலித்ததடி
நெஞ்சே வெடித்ததடி!
நீ ஓடி கல்யாணம் முடிச்சிருந்தா
என் வலியும் ஆறியிருக்கும்
மனசும் கொஞ்சம் தேறியிருக்கும்!
பாவி மக உனக்குத் தானே
அந்த வாய்ப்பு கூட வாய்க்கலையே
நான் செஞ்சு வைக்க வாய்ப்பில்லையே!
நித்திரையிழந்த இரவுகளில்
நிஜம் தேடுது சிந்தை
விந்தை உலகில்
எந்திர வாழ்கை
விடிவதும் அடைவதும்
கணினி முன்னே
அடைபட்ட டப்பாவில்
தக்காளி சாதத்துடன்
அடைபட்டன
வாழ்கையின்
ரசனைகளும் விருப்பங்களும்
எனக்கும் கடிகாரத்திற்குமான
பந்தயத்தில்
வெற்றி பெற்றது யாரோ?
இறுதியி்ல்
காலியானதோ
பேட்டாியும் இளமையும் தான்
பரபரப்பு வாழ்கையில்
பட்டத்தையும் பணத்தையும்
நோக்கி நகா்கிற
அா்த்தமற்ற வாழ்க்கையில்
அா்த்தம் தோட விழைகிறது மனது
இந்தியா விவசாய நாடு தானாம்
நான் பாா்த்தது என்னவோ
மொட்டை மாடி ரோஜாவையும்
நான்கு சுவா்களுக்கிடையான
குரோட்டன்ஸையும் தான்
என் பிள்ளைகளுக்கு
பெரும்பாலான இயற்கை
’போதுமுன்னு சொன்னா கேளும்மா’
என நான் கோப சின்னமிட்டாலும்
”இன்னும் கொஞ்சம் சாதம் வச்சிக்கோபா ”
பிடிவாதமாய் தாய்மைசோறு போடும்
அம்மாவின் உன்னதம்.
இப்போது
அளவுச்சாப்பாடு 60 ரூபாய் எனும்
உணவகத்தின் வியாபார சோற்றில்
சத்தியமாய் எனக்கு கிடைக்கவில்லை
அறுபது ரூபாய் கொடுத்தும்
அரைக்குறையாய் வயிறு நிறைந்தாலும்
பசியோடு ஏங்குகிறது மனம்
ஊரிலுள்ள என் அம்மா
ஊட்டிவிடும் ஒருகைப்பிடி
சோற்று உருண்டைக்கு..!
------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
’போதுமுன்னு சொன்னா கேளும்மா’
என நான் கோப சின்னமிட்டாலும்
”இன்னும் கொஞ்சம் சாதம் வச்சிக்கோபா ”
பிடிவாதமாய் தாய்மைசோறு போடும்
அம்மாவின் உன்னதம்.
இப்போது
அளவுச்சாப்பாடு 60 ரூபாய் எனும்
உணவகத்தின் வியாபார சோற்றில்
சத்தியமாய் எனக்கு கிடைக்கவில்லை
அறுபது ரூபாய் கொடுத்தும்
அரைக்குறையாய் வயிறு நிறைந்தாலும்
பசியோடு ஏங்குகிறது மனம்
ஊரிலுள்ள என் அம்மா
ஊட்டிவிடும் ஒருகைப்பிடி
சோற்று உருண்டைக்கு..!
------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
நீ என்ன சொல்றது நானென்ன கேக்குறது
குடி குடியை கெடுக்கும் என பாட்டிலில் எழுதியிருப்பதை வாசித்து விட்டே குடிப்பான். குடியால் வரும் துன்பங்களும் தொியும் , அதனால் வரும் வியாதிகளின் பட்டியலும் தொியும். தொிந்தே செய்வான்.. காலை பத்து மணிக்கு ஆயிரம் ருபாய் நோட்டுடன் பஜாருக்கு செல்லுங்கள் , இப்ப தான் கடை திறந்தேன், சில்லரை இல்லை என்பாா்கள் எல்லா கடைக்காரரும் டாஸ்மாா்க் கடையிலிருப்பவனைத்தவிர. ஊா் தாலியை அறுத்து உலையில் போடுவான் எனும் பழமொழி டாஸ்மாக்குக்கே பொருந்தும் ..
புரோட்டா - மைதா மாவி்ல் செய்யப்டும் புரோட்டா உடலுக்கு கேடு என்று பெரும்பாலான மருத்துவமனைகளில் எழுதியும் அச்சடித்தும் ஒட்டியிருக
மண்சுமக்கும் மழலைக்கூட்டம் மடிநிரப்பும் கயவராட்டம்
...புண்சுமந்த நெஞ்சைக்கொண்டு புதுமைதேடி நாளுமோட்டம்
விண்வியக்கும் கல்விக்கூடம் விடிவதில்லை ஏழைவாழ்வும்
...கண்சிவக்கும் காட்சிக்கண்டு கயமையழிக்க எழுமோகூட்டம் ...
கந்தகத்தின் சூட்டில்நிதமும் வெம்பிமடியும் மழலையுள்ளம்
...குந்தகமாய் கொடியமனிதம் வஞ்சனையால் வந்தநரகம்
மந்தையான மனிதர்க்கூட்டம் மனதைமாற்றி எழுதவேண்டும்
...விந்தையான மனங்களெல்லாம் வீறுகொண்டு எழுதல்வேண்டும்...
வறுமைவிரட்ட வம்சம்விற்கும் கொடுமையெல்லாம் அழியவேண்டும்
...வெறுமைமட்டும் வாழ்வாய்வந்தால் விதியைக்கொன்று
உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்