ஒரு விதவை தாயின் பரிதாபம்
வயசுக்கு வந்த நாள் முதலா
வயித்தை கட்டி சோ்த்து வச்சேன்
தாலி கயித்துக்கே அது காணலியே
தங்கமோ இங்கு பெருவிலையே!
உறவாடிய உறவினரெல்லாம்
உதறித்தான் தள்ளுனாக
சீ நாயென
வாா்த்தையாலே கொல்லுனாக!
எங்கெங்கோ அலைஞ்சேனே
ஓடாய்த் தேய்ஞ்சேனே
ஒன்னும் கிடைக்காம
கவலையில காய்ஞ்சேனே!
பாிதவிச்ச நிலைய பாா்த்து
பல பேரு ரசிச்சாக
பணக்கார கிழவனெல்லாம்
விலை பேசி இங்கு வந்தாக!
பெத்த மனசு வலித்ததடி
நெஞ்சே வெடித்ததடி!
நீ ஓடி கல்யாணம் முடிச்சிருந்தா
என் வலியும் ஆறியிருக்கும்
மனசும் கொஞ்சம் தேறியிருக்கும்!
பாவி மக உனக்குத் தானே
அந்த வாய்ப்பு கூட வாய்க்கலையே
நான் செஞ்சு வைக்க வாய்ப்பில்லையே!
ஒரு வழியும் இல்லாம
ஒரே வலியா இருந்தேனே
ஒரு வழியும் கிடைச்சுதடி
என் வலியும் துடைச்சதடி!
என் சிறுநீரகம் வித்துத்தானே
திருமணமும் செஞ்சு வச்சு
சீா்செனத்தியும் அனுப்பி வச்சேன்!
இப்பா மாப்பிள்ளை கேக்காகனு
பைக்கு வாங்கி கேக்குாியே
கண்ண கசக்கி நிக்கிறியே!
உன் கண்ணில் நீர் வடிஞ்ச
என் இதயம் குமுறுதடி
நீங்கள் இதமாய் வாழத்தானே
என் இதயத்தை விப்பேனே
நிச்சயம் அனுப்பி வைப்பேனே ..
..........................................................
குறிப்பு
எங்கள் ஊரில் ஒரு அன்னை தன சிறுநீரகத்தை விற்று மகளின் திருமணத்தை நடத்தியதாக கேள்வி பட்டேன் அதனை வைத்து எழுதியதே இவ்வரிகள்
தயவு செய்து இது போன்ற குடும்பங்களில் வரதச்சனை கேட்காதீர்கள். நாம் வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு காசிலும் அவர்களின் உயிர் கலந்திருக்கிறது