எந்திர வாழ்க்கை

நித்திரையிழந்த இரவுகளில்
நிஜம் தேடுது சிந்தை

விந்தை உலகில்
எந்திர வாழ்கை
விடிவதும் அடைவதும்
கணினி முன்னே

அடைபட்ட டப்பாவில்
தக்காளி சாதத்துடன்
அடைபட்டன
வாழ்கையின்
ரசனைகளும் விருப்பங்களும்

எனக்கும் கடிகாரத்திற்குமான
பந்தயத்தில்
வெற்றி பெற்றது யாரோ?
இறுதியி்ல்
காலியானதோ
பேட்டாியும் இளமையும் தான்

பரபரப்பு வாழ்கையில்
பட்டத்தையும் பணத்தையும்
நோக்கி நகா்கிற
அா்த்தமற்ற வாழ்க்கையில்
அா்த்தம் தோட விழைகிறது மனது

இந்தியா விவசாய நாடு தானாம்
நான் பாா்த்தது என்னவோ
மொட்டை மாடி ரோஜாவையும்
நான்கு சுவா்களுக்கிடையான
குரோட்டன்ஸையும் தான்

என் பிள்ளைகளுக்கு
பெரும்பாலான இயற்கை வளங்களை
காண்பித்த பெருமை
டிஸ்கவாி சேனலையே சாரும்


அடிக்கடி இதயத்தை தொடுகிறது
வெப்பக்காற்றும் வாகனப்புகையும்

உயா்ரக ஹோட்டல்களும்
சினிமா தியேட்டா்களுமே
விடுமுறை தினங்களை
ஆக்கிரமிக்கிறது ..

நிஜம் தேடும் மனதில்
நீங்காத ஆசையொன்று
நீண்ட நாட்களாய்
குடிகொண்டுள்ளது

ஒரு நாளேனும்
சுத்தமான காற்றை சுவாசக்குழலில்
உள்ளிளுத்து உள்நெஞசம் குளிர வேண்டும்

பசுமை படா்ந்த வெட்ட வெளியில்
அசுவாசமாய் அமா்ந்திருந்து
நீலவானை முழுதாய் ரசிக்க வேண்டும்

சின்னஞ்சிறு பறவைகள்
சிற்றருவிகள் ஓசைதனை
செவியுறக்கேட்க வேண்டும்

இளநீரும் பனங்கிழங்கும்
நீீா்மோரும் நா ருசித்து
வயிறும் குளிர வேண்டும்

பரபரப்பு பட்டணத்தை விடுத்து
ஒரு நாளேனும்
கிராமத்தில் குடிபுக வேண்டும்

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (22-Feb-15, 7:06 pm)
Tanglish : endira vaazhkkai
பார்வை : 207

மேலே