நறுமணம் வீசும் நாயகன்

நறுமணம் வீசும் நாயகன்.
--------------------------------------------
விரல் நுனியில் தன் குழந்தையின்
மலம் பட்ட ஆடையை எடுக்கும் ஆண்களுக்கும்
குப்பை வண்டி அருகில் வந்ததும்
மூக்கை பிடிக்கும் பெண்களுக்கும்
முன்னுதாரனமாய் ஜொலிக்கிறான்
குப்பைகளின் சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் குப்பைவண்டிக்காரன்
குப்பைகளின் மன்னனாக.
முடிக்கொன்று முகத்திற்கொன்று
உடலுக்கொன்றென நறுமண ஸ்பிரே பயன்படுத்தும்
நபர்களுக்கு புரிவதில்லை.
முழுமையாக சாக்கடையில் இறங்கும் குடிமகன்
வீதியில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தால்
நாமெல்லாம் நறுமணம் கதழ வீதியில்
நடக்க முடியாதென்பதும்
நறுமணம் வீச செய்யும் நாயகன்கள்
வாங்கும் சம்பளத்திற்குத்தான்
வேலைபார்ப்பேன் என்றிருந்தால்
நாடே குப்பைகளின் குவியலாக தான்
காட்சி தருமென்பதும்..

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (1-May-15, 11:01 am)
பார்வை : 673

மேலே