உபயோகம்

அந்த முதிய
தம்பதிகளின் ..
அறுபதாம் ஆண்டு
மண நாள் ..
..
அப்போதும் கூட
நாணத்துடன்..
அந்த அம்மா..
பெருமையுடன் அவர் ..
...
எப்படி ..இவ்வளவு..
நாளாக..இன்பமாக
என்றார் நண்பர் ..!
..
உடைந்ததை ஒட்டியேனும்
பாதுகாக்கும்
காலத்தை சேர்ந்தவர்கள்
அவர்கள்..
உபயோகித்து..
உதவியற்றுப் போனால்
தூக்கி எறிந்து
அறுத்துப் போடும்
காலத்தில் ..
பிறக்கவில்லை
அவர்கள்..
என்றேன்..,!

எழுதியவர் : கருணா (1-May-15, 10:35 am)
பார்வை : 110

மேலே