அவனின் கெளரவம்

அவனருகாமை ...
அவளுக்கு
மிகவும் பிடிக்கும்

அவனோடிருக்கும்
பொழுதுகளை
மிகவும் ரசிப்பாள்...

அவன்
அவளருகில் இருந்தாலும்
அவன் பணிகளைப்பற்றியோ
அவனின் தனித்திறன்களையோ
அளவாடிக் கொண்டிருப்பான்...

அவள் சிரிப்பாள் ...
என்னோடு இருக்கும் நொடிகளை
எனக்காகச் செலவிடுவென

அவள் அறிந்திருக்கவில்லை
அவளில்லாத பொழுதுகளில்
அவளின் சேலைகளே
அவனைத் தூங்கச்செய்யும்
போர்வைகளென்பதையும் ...

அவளைப்பற்றிய பேச்சுக்களே
அவன் உறவுகளுக்கு மத்தியில்
அவனின் கெளரவமென்பதையும் ..
-------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (1-May-15, 10:26 am)
Tanglish : avanin gowravam
பார்வை : 2089

சிறந்த கவிதைகள்

மேலே