உழைப்பவர்கள் தினம்

உழைப்பவனே
உழைத்துக் கொண்டே இருக்கின்றாய்
ஒவொவொரு நாளும் ...
ஊதியம் நிச்சயம் உண்டு....
உழைத்துக் கொண்டே இரு...

உழைப்பவன் உழைப்பவனாயும்
உயர்பவன் உயர்பவனாயும்...
இதுவும் மாறும்
உனக்கும் நல்ல காலம் வரும்..
உழைத்துக் கொண்டே இரு...

மே 1 மட்டும் உன் நாள் அல்ல
மாதம் ஒவ்வொன்றும் உன் நாளே ..
உழைத்துக் கொண்டே இரு.,

உன் வியர்வை விருட்சமாகும் ..
உன் உழைப்பும் உயர்வாகும்..
உழைத்துக் கொண்டே இரு..

வாழ்த்த தொடங்கிய வரிகள்
வருத்ததோடு ஏங்கி நிற்கின்றது ...

உழைக்கத்தானே சென்றோம்..
உயிரையும் இழந்தோம் ...

(படுகொலை செய்யப்பட்ட 20 தொழிளார்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்)

எழுதியவர் : vinoliyaebinezer (1-May-15, 10:07 am)
சேர்த்தது : vinoliya Ebinezer
பார்வை : 156

மேலே