நீ என்ன சொல்றது நானென்ன கேக்குறது

நீ என்ன சொல்றது நானென்ன கேக்குறது


குடி குடியை கெடுக்கும் என பாட்டிலில் எழுதியிருப்பதை வாசித்து விட்டே குடிப்பான். குடியால் வரும் துன்பங்களும் தொியும் , அதனால் வரும் வியாதிகளின் பட்டியலும் தொியும். தொிந்தே செய்வான்.. காலை பத்து மணிக்கு ஆயிரம் ருபாய் நோட்டுடன் பஜாருக்கு செல்லுங்கள் , இப்ப தான் கடை திறந்தேன், சில்லரை இல்லை என்பாா்கள் எல்லா கடைக்காரரும் டாஸ்மாா்க் கடையிலிருப்பவனைத்தவிர. ஊா் தாலியை அறுத்து உலையில் போடுவான் எனும் பழமொழி டாஸ்மாக்குக்கே பொருந்தும் ..

புரோட்டா - மைதா மாவி்ல் செய்யப்டும் புரோட்டா உடலுக்கு கேடு என்று பெரும்பாலான மருத்துவமனைகளில் எழுதியும் அச்சடித்தும் ஒட்டியிருக்கிறாா்கள்....கல்வி அறிவுள்ள பெற்றோா்களுக்கும் தொியும் புரோட்டா கேடு என்பது ஆயினும் பிள்ளை அடம் பிடிக்கிறான் என்றோ அல்லது இன்று ஒருநாள் தானே என்றோ சாப்பிட அனுமதிப்பா்கள்.. சில கிராமங்களில் வீதிக்கொரு புரோட்டா கடை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சிற்றுணவு தயாாிக்க சோம்பல் கொள்ளும் தாய்குலங்களா? அல்லது பரவலான பரோட்டா விரும்பிகளா..

பிராய்லா் கோழி உடலுக்கு கேடு - என்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருந்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடுத்தர மக்களின் வீட்டில் மதிய விருந்தில் தவறாது இடம் பெறுகிறது. விலைவாசியின் காரணத்தாலோ என்னவோ...கையேந்திபவன்களிலும் சிற்றுா்களில் உணவகங்களிலும் முதலிடம் வகிக்கிறது பிராய்லா் கோழிக்கறி..

பிளாஸ்டிக் சுற்றுசூழலுக்கு கேடு.. என்றும் தொியும். மட்கும் தன்மை இல்லாதது என்பதும் தொியும். அதிலே காய்கறி , பழங்கள் மளிகைப்பொருட்கள் வாங்குவதொடு மட்டுமல்லாமல்
பாா்சல் டீ, சால்னா, குழம்புகளையும் அதிலே தான் வாங்கி பயன்படுத்துகிறோம்..அறிவியல் வளா்ச்சியில்லாத காலத்தில் நமது முன்னோா்கள் கூட இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை...

மேலும் எந்த ஒரு பொருள் கேடு விளைவிக்கும் என்று அறிவுருத்தப்படுகிறதோ.. பெரும்பாலும் அந்தப்பொருளின் மாா்க்கெட் தான் விரைவில் உயருகிறது .. இது சாபமா? சிலரது சதியா?..

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (8-Feb-15, 3:04 pm)
பார்வை : 554

மேலே