பிரியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரியா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  22-Jan-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2014
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் முதுகலை அறிவியல் மாணவி. கவிதை எழுதுவதில் எனக்கு rnஆர்வம் அதிகம். கவிதைகளை வாசிப்பதும் ஆர்வம்.rnநிறைய கவிதைகள் எழுத வேண்டும்.

என் படைப்புகள்
பிரியா செய்திகள்
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2016 8:27 pm

உலகிற்கு என்னை
அறிமுகமாக்கி,
உலகையே எனக்கு
உறவுமாக்கிய என்
முதல் தோழி!

கருவறை நாட்களில்
கருத்துடன் காத்து-என்னை
பிறப்பிக்கும் பொருட்டு
புதுபிறவி கண்டாய்!!

தள்ளாடிய என்
தளிர்நடைக்கும்
புரியாத என்
புது மொழிக்கும், நீயே
முதல் 'இரசிகை'!

வீட்டுக்குள் கவனிப்பில்
அன்பையும்
வெளியில் கண்டிப்பில்
அக்கறையையும்
தெளிக்கும் உன்
மொழிகள்!!

எந்தன் கண்ணில்
தூசு கண்டால்,
உந்தன் கண்கள்
கலங்கிவிடும்!

என் விருப்பங்கள்
எல்லாம் உன்
விரல்நுனிக்குள்!
என் கனவுகள்
எல்லாம் உன்
கண்களுக்குள்!!

உறவுகள் விலகி
உரிமைகள் சிதறி

மேலும்

அழகான வரம் சுமந்தவை சுமக்கும் கருவறை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:37 am
பிரியா - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 3:35 pm

பெண்மையின்
அழகினை பறைசாற்ற,
புருவமத்தியில்
சிரித்து நிற்கும்
சிவந்த நிலா!...

மேலும்

தோழமைகளின் கருத்துகளுக்கு மிக்க நன்றி!!... 15-Apr-2016 5:01 pm
அழகு.... 17-Sep-2014 7:46 pm
அருமை நட்பே...... 17-Sep-2014 6:18 pm
அடடா அழகு 17-Sep-2014 6:12 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2016 4:47 pm

ஒரு போதும் தவறாமல்
சிலையாகி விடுகிறது!
சிற்பியின் சிந்தனை!!

உளி கொடுக்கும்
வலி பொறுத்து
சிலையாகும் கல்லெல்லாம்
சிற்பிக்கு வாய்த்த
சிறப்பான பரிசுகள்!

பாறைகளெல்லாம்
பாவைகளாக்கும்!
கல்லிலும் கூட
கடவுளை எடுக்கும்!
சிற்பியின் சிந்தனை!!

சிற்பியின்
உளி தீட்டும்
உயிரோவியம் கண்டால்
ஊமை விழிகளும்
வியப்பை மொழியும்!!...

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2016 4:37 pm

அதிகாரம் கூட
அடிபணிந்து நடக்கும்!
செல்லமாய் மிரட்டும்
சிறுமியின் முன்னால்!!

பிடிவாதம் கூட
பிடித்த குணமாகும்!
மிட்டாய்க்கு போராடும்
குழந்தையின் அருகில்!!

பொம்மைகளுக்கும்
உயிர் கொடுத்து
உறவாடும் உன்னதம்!
மழலையின் உலகம்!!

ஓய்வின்றியே ஓடிடும்
கால்கள்!
தொய்வின்றியே தேடிடும்
கண்கள்!!

மழலையின் இதழ்தெறிக்கும்,
இசைச்சிரிப்பின் இனிமையில்
இசை கூட கசக்கும்!!

மழலை பேசும்
கொஞ்சல் மொழிகள்
புரியாததொரு
புதுக்கவிதையாகும்!!...

மேலும்

அப்பா கூட அம்மாவாகிவிடுவார் குழந்தையின் அன்பில். அருமை. 16-Apr-2016 4:46 pm
மழலை என்றும் உயிரில் வாழும் ஓவியம் 16-Apr-2016 12:22 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2016 9:32 pm

இதயத்தின்
காயத்தில்
இதமாய்
இறகொன்று
வருடுதல் போலே,
சோகம் கலைந்து
சுகம் கொள்ள
வைக்கும்
சுவையான ராகம்!
தாயாய்
தாலாட்டிடும்!
தோழமையுடன்
துன்பம் துடைக்கும்!
அன்பான
வரிகளால்,
அழகாய் என்னை
தேற்றி விடும்!!...

மேலும்

பிரியா - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 7:52 pm

காலை விழிப்பில் நான்
கேட்கும் முதல் வாழ்த்து-என்றும்
உன்னுடையதே!

சின்ன சண்டையோ
செல்லச் சண்டையோ முதலில்
மன்னிப்புக்கோரி
மனதை மகிழ்விப்பது நீதான்!

திட்டுவாங்குவதற்காகவே
திறமையாய் நடிப்பவன் நீ!-என்னிடம்
அடிவாங்குவதில்
ஆனந்தம் உனக்கு!
வீட்டில் என்னைப் போட்டுத் தருவதில்
வில்லன் நீ!

அறிவுரை சொல்லி சிலநேரங்களில்
அழவைத்தாலும் - என்னை
ஆழமாய் யோசிக்கவைப்பவன் நீ!

என் குறும்புகளை
நேசிக்கும் அப்பா நீ!
என் தவறுகளைக்
கண்டிக்கும் அம்மா நீ!
என்னை
இளவரசியாக்கி
இன்பம் காணும் என்
அண்ணன் நீ!

கவலைகளின் போது - என்
கரம்பிடித்து தூக்கிவிடுபவன் நீ!
வாழ்க்கைப் பாதையில் எனது
நடைவண்ட

மேலும்

வருகையில் கருத்தில் மகிழ்ந்தேன் நன்றி தோழமையே..... 04-Mar-2015 6:43 pm
நன்றி தங்கச்சி! 04-Mar-2015 6:42 pm
நன்றி தோழமையே! 04-Mar-2015 6:42 pm
அருமையான படைப்பு. அண்ணன் மேல் பாசம் கொண்ட ஒவ்வொரு தங்கையின் மனநிலையை அழகாய் சொல்லும் அழகான படைப்பு!... 26-Feb-2015 3:11 pm
பிரியா - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 11:03 am

உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்

மேலும்

மின் குமிழொன்று குறிப்பெடுத்துக் கொண்டது குறையொளி உமிழ்ந்து அறையின் கும்மிருட்டை துடைத்துக் கொண்டே...... அழகான வரிகள் ...! மின்குமிழுக்கும் உயிர் கொடுத்து விட்டீர்கள்...! அருமை ....அருமை...! 14-Mar-2015 2:58 pm
"அண்ணனின் குழந்தை ஆகிப் போனது இடுப்பை விட்டும் இறங்காத இனிய சுமையாக"...... அண்ணா எல்லாத் தங்கச்சிகளின் மனநிலை இது... அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்... கண்களைப் பனிக்க வைத்த படைப்பு அண்ணா!! "அந்நியமாக அடிமனது உணர்த்தியது பிறந்த வீட்டையும், பிறந்த வீட்டு உறவுகளையும்"..... ஐந்து வருடங்களுக்குப் பின் நடக்க போகும் இவை அனைத்தையும் நினைத்து இப்பவே பயம் வந்துவிட்டது.... கூடவே அழுகையும்..... 04-Mar-2015 6:54 pm
அருமை தோழரே! 26-Feb-2015 3:06 pm
பெண்களின் உணர்வுடன் பெண்ணே வந்து கருத்தளித்தது மகிழ்வு அழகிய கருத்து மிக்க நன்றி தோழி 21-Feb-2015 11:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே