புதுக்கவிதை

அதிகாரம் கூட
அடிபணிந்து நடக்கும்!
செல்லமாய் மிரட்டும்
சிறுமியின் முன்னால்!!
பிடிவாதம் கூட
பிடித்த குணமாகும்!
மிட்டாய்க்கு போராடும்
குழந்தையின் அருகில்!!
பொம்மைகளுக்கும்
உயிர் கொடுத்து
உறவாடும் உன்னதம்!
மழலையின் உலகம்!!
ஓய்வின்றியே ஓடிடும்
கால்கள்!
தொய்வின்றியே தேடிடும்
கண்கள்!!
மழலையின் இதழ்தெறிக்கும்,
இசைச்சிரிப்பின் இனிமையில்
இசை கூட கசக்கும்!!
மழலை பேசும்
கொஞ்சல் மொழிகள்
புரியாததொரு
புதுக்கவிதையாகும்!!...