வெள்ளி நிலவே எனக்கு பிடித்த பாடல்- படம் நந்தவன தேரு

இதயத்தின்
காயத்தில்
இதமாய்
இறகொன்று
வருடுதல் போலே,
சோகம் கலைந்து
சுகம் கொள்ள
வைக்கும்
சுவையான ராகம்!
தாயாய்
தாலாட்டிடும்!
தோழமையுடன்
துன்பம் துடைக்கும்!
அன்பான
வரிகளால்,
அழகாய் என்னை
தேற்றி விடும்!!...

எழுதியவர் : தேன்கவி (7-Feb-16, 9:32 pm)
சேர்த்தது : பிரியா
பார்வை : 91

மேலே