எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

’போதுமுன்னு சொன்னா கேளும்மா’ என நான் கோப சின்னமிட்டாலும்...



’போதுமுன்னு சொன்னா கேளும்மா’
என நான் கோப சின்னமிட்டாலும்
”இன்னும் கொஞ்சம் சாதம் வச்சிக்கோபா ”
பிடிவாதமாய் தாய்மைசோறு போடும்
அம்மாவின் உன்னதம்.
இப்போது
அளவுச்சாப்பாடு 60 ரூபாய் எனும்
உணவகத்தின் வியாபார சோற்றில்
சத்தியமாய் எனக்கு கிடைக்கவில்லை

அறுபது ரூபாய் கொடுத்தும்
அரைக்குறையாய் வயிறு நிறைந்தாலும்
பசியோடு ஏங்குகிறது மனம்
ஊரிலுள்ள என் அம்மா
ஊட்டிவிடும் ஒருகைப்பிடி
சோற்று உருண்டைக்கு..!
------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 8-Feb-15, 4:23 pm

மேலே