உலகம் தெரியாதவர்கள்
சோறு, பிட்டு, இட்லி
தோசை என நித்தமும் உண்டு
அலுத்து வெறுத்து
விதவிதமாய் சாப்பிட
ஏங்கி தவிப்பவர்களுக்குத்
தெரிவதில்லை.
பசி போக்கவே உணவுக்காக
ஏங்கும் பச்சிளம் பாலகர்கள் பலர்
இவ்வுலகில் உணவை காணவே
ஏங்கித் தவிக்கிறார்கள் என்று....