எண்ணினால்
மகளாய் நான் பிறந்த போது
மகாலட்சுமி எனக் கொண்டாடிய..... - தந்தை
தந்தை சொல்லே வேதம் என
என்னை வளர்த்த.... - தாய்
எப்போதுமே இமையாய்
என்னைக் காக்கும்.....- சகோதரர்கள்
என் மகிழ்ச்சிக்காகவே
தேடித்தேடி எடுத்த.....- மணாளன்
என் உயிராகவேயான
எனதருமை..... - பிள்ளைகள்
இப்படியே போன என் வாழ்வில்
நின்று நிதானித்து திரும்பிய வேளை
அரசின் ஓய்வு காலமாம்
கடந்த காலச்சக்கரத்தில் ..
"என் வாழ்க்கை"யில்
நானாக இருந்த நொடிகள்
விரல் கொண்டு
எண்ணினால்...?
விடைகள் என்னமோ
"உனக்காகத்தான் எல்லாமே!"
உலகு சொல்கிறது.
பெண்ணாய் நீ பிறந்த வேளையில்....