அந்திமக் கடிதம்

மகனே ,
உயில் எழுத
பணமில்லை ....
உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்
சடலத்தை
சங்கு ஊதி
மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க
சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க
செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை
சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்
மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது
உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !
சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !
தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .
வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு
இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி
இக்கடிதத்தை எழுதுகின்றேன்
ஆசீர்வாதங்களுடன் .... அன்புத்தாய்
இத்தாயின் தியாகங்களுக்கு
ஒரு கிரீடம் .....