வாழ்ந்து பார் வாழ்க்கை

விளக்கமாறு பிஞ்சிடும்
அம்மாவின் அன்பு!

கழுதைக் கெட்டா
குட்டிச்சுவர்தான்
அப்பாவின் ஆசீர்வாதம்!

மாடு மேய்க்கத்தான்
லாயக்கு -என்
எதிர்கால கணிப்பில்
வரலாற்று ஆசிரியர்!

பொறம்போக்கு
பொறம்போக்கு மேல
ஏறி வாயா - கண்டக்டரின்
வாழ்க்கைத் தத்துவம்!

எருமை மாடு
கண்ணு தெரியல...
மங்கையரின் மங்கள
வார்த்தைகள்!

சும்மா இருங்க
உங்களுக்கு ஒண்ணும் தெரியாது
விஞ்ஞானியானாள் புதுமனைவி!

மாப்பிள வெள்ளந்தியா
இருக்காரே - வஞ்சப்புகழ்ச்சியில்
மாமனார்!

எனக்கு இப்பவே செல்போனு
வேணும்- அஞ்சாங் கிளாஸ்
படிக்கும் அருமை மவன்!

விளக்கமாறு பிஞ்சிடும்
என் மகனுக்கு அம்மா!

கழுதைக் கெட்டா
குட்டிச்சுவர்தான்
அப்பாவாக நான் இப்போ!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Apr-14, 12:06 am)
பார்வை : 190

மேலே