நினைவுகள்
என் வாழ்க்கை என்னும் வசந்தத்தில்
வருடம் ஒரு நினைவுச் சின்னம்
வந்து விட்டு செல்லாமல்
மனம் என்னும் சுவட்டினிலே
மறவாமல் பதிவதுண்டு.....!
மறந்திடத்தான் நினைத்தாலும்
மற்ற ஒரு காரணத்தால்
மனச் சுவட்டில் பதிந்த அந்த
மறக்கமுடியா நினைவுகளே
ஞாபகமாய் வருகிறதே .....!
இதனாலே நித்தம் நித்தம்
மனதில் நின்று விட்ட
நினைவுகளே
என்றும் என் வாழ்க்கையாகும்
என்றும் அல்ல என்றென்றும் .....!